ஒடிசாவில் பிரம்மகிரி எனும் சிறு கிராமத்தில்... அலர்நாதர் எனும் நாமத்துடன். பகவான் கிருஷ்ணர் எழுந்தருளியுள்ளார். அலர்நாதர் என்பதற்கு ஆழ்வார்களின் தலைவர் என்று பொருள்.
புரியில் பிறந்த ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத்தை மிகவும் நேசித்தார். இவ்விடம் விருந்தாவனத்திற்கு சமமானது என்றும், இங்குள்ள சிறிய ஏரியானது ராதா குண்டத்திற்கு சமமானது என்றும் அவர் கூறினார். அந்த ஏரியின் கரையில் சைதன்ய மஹாபிரபு ஓய்வெடுப்பதுண்டு. 1929இல் ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத் கோயிலைப் புதுப்பிப்பதற்கும் சுற்றுசுவர் கட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். இப்பணியை முடிப்பதில் அவர் எந்த அளவிற்கு பெரும் ஆர்வம் கொண்டார் என்றால், அதற்காக அவர் அங்கு வேலை செய்தவர்களுக்கு பீடி சுருட்டிக் கொடுத்துள்ளார். மேலும், வாமனர், நரசிம்மர், மற்றும் வராஹரின் சிற்பங்களை அவர் கோயிலின் வெளிச்சுவற்றில் பதித்தார்.