வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
சிகிச்சை பலனின்றி நோயாளி மரணமடைந்தார்,” என்னும் வாக்கியத்தை செய்தித்தாள்களில் படித்திருப்போம், தொலைக்காட்சிகளில் கேட்டிருப்போம், மருத்துவமனைகளில் நேரில் கேட்டிருப்போம். நமது உறவினர் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சை பலனளிக்காதா என்று நாமும் ஏங்குகிறோம்,...
பிறந்தவர்கள் அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்பது உலக நியதியாகும். நம் வாழ்வின் முக்கிய பிரச்சனைகளான பிறப்பு, இறப்பு, முதுமை , நோய் ஆகிய நான்கும் மருத்துவத்துடன் தொடர்புடையவை . பிறக்கும்போது மருத்துவர் தேவைப்படுகிறார், இறக்கும்போது மருத்துவர்கள் வாழ்வை நீட்டிக்க முயல்கின்றனர், முதுமை யின் பிரச்சனைகளைச் சமாளிக்க மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்; நோயினைப் பொறுத்தவரை யில் மருத்துவரின் தேவையைப் பற்றிக் கூற வேண்டிய அவசியமே இல்லை.