முன்னொரு காலத்தில், பிரஜாபதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தனர். இதில் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். பிரஜாபதிகளின் தலைவரான தக்ஷன் வேள்விச் சாலைக்குள் பிரவேசித்தபோது, அவரது தேஜஸினால் அவையே பிரகாசமானது. அச்சமயம் சிவபெருமான் மற்றும் பிரம்மதேவரைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அவையில் உள்ளவர்களது மரியாதையை ஏற்று, தனது தந்தையாகிய பிரம்மதேவரை பணிந்து வணங்கி அவரின் அனுமதி பெற்று இருக்கையில் அமர்ந்தார் தக்ஷன். அச்சமயம் தனக்கு எவ்வித மரியாதையும் செலுத்தாது அமைதியாக அமர்ந்திருந்த சிவபெருமானைக் கண்டு தக்ஷனுக்கு கோபம் அதிகரிக்க, அவர் சிவனுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைக் கூறலானார்.
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார்."வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம்...
வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும்...