இன்பத்தை வேண்டி பல்வேறு தொழில்களைச் செய்கின்ற நாம், தொழில்களை தெய்வங்களாக எண்ணி காலத்தினை வீணாக்குகின்ற நாம், உண்மையாக செய்ய வேண்டிய தொழில் பக்தித் தொண்டு மட்டுமே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பிறவிதோறும் அரைத்தவற்றையே மீண்டும் அரைத்திடாது இனியுள்ள காலங்களையாவது நன்முறையில் பக்தித் தொண்டில் ஈடுபடுத்தி உண்மையான ஆனந்தத்தினை அடைவோமாக.
பக்தி–யாரெல்லாம் இதில் ஈடுபடலாம்? என்னும் கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழக்கூடிய ஒன்றாகும். பக்தி என்று சொல்வதைவிட பக்தித் தொண்டு என்று உரைத்தல் சிறந்ததாகும். ஏனெனில், பக்தி என்பது பகவானுக்குச் செய்யும் தொண்டுகளைக் குறிக்கும். பகவானின் திருநாமத்தைப் பாடுதல், பகவத் கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களைப் படித்தல், அவற்றைக் கேட்டல், பகவானுடைய விக்ரஹத்திற்கு ஆரத்தி, நைவேத்தியம் போன்ற சேவைகளைச் செய்தல், பக்தர்களுக்குப் பணிவிடை செய்தல், பிரசாதம் விநியோகித்தல், கோவிலை சுத்தம் செய்தல், பக்தித் தொண்டை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், தன்னிடமிருக்கும் அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணித்தல் போன்ற பல்வேறு செயல்கள் பக்தித் தொண்டு என்று அழைக்கப்படுகின்றன.
பரந்தாமனின் பேர் பாட பாரெங்கும் பரவியுள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு இந்த பக்திசித்தாந்தரே காரணம், இவரது கட்டளையின்படியே பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் கிருஷ்ண பக்தியை மேல்நாடுகளில் பரப்பினார். சித்தாந்தத்தினை (ஆன்மீக அறிவின் இறுதி நிலையினை) மக்களுக்கு வழங்க அரும்பாடுபட்ட இந்த மஹாத்மாவின் புகழ்பாடி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையைப் பெறுவோமாக.