விஸ்வரூபரின் தந்தைவழி உறவினர்கள் தேவர்கள், தாய்வழி உறவினர்கள் அசுரர்கள். அவர் யாகம் செய்தபோது வெளிப்படையாக தேவர்களுக்காகவும் இரகசியமாக அசுரர்களுக்காகவும் யாகத் தீயில் நிவேதனம் அளித்தார். இதைப் புரிந்து கொண்ட இந்திரன் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், கோபத்துடன் விஸ்வரூபரின் மூன்று தலைகளையும் வெட்டி வீழ்த்தினார்.
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல அசம்பாவிதங்களையும் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஆபத்துகளையும் அநீதிகளையும் சந்திக்கின்றான். நேர்மையாக வாழ்ந்தும் பலனில்லாமல் போய்விட்டதே? இத்தகு கஷ்டங்கள் எனக்கு மட்டும் ஏன் நிகழ்கின்றன? துயரங்களுக்கான காரணம் என்ன? அநியாயங்களை தட்டிக்கேட்பார் யாரும் இல்லையா? என பல வினாக்கள் மனதில் எழுகின்றன.
ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார், அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது "வைஷ்ணவர்களில் முதன்மையானவர்" என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடத்தை ஸ்ரீ நவத்வீப தாமத்தில்...