- Advertisement -spot_img

TAG

body

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

காமம், கோபம், பேராசை ஆகியவை ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கதவுகள். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும் என்று கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். நரகத்தின் இந்த மூன்று கதவுகளிலிருந்து தப்பியவன் தன்னுணர்வைப் பெறுவதற்கு அனுகூலமான செயல்களைச் செய்து படிப்படியாக பரம இலக்கை அடையலாம்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணரின் உலகம் இந்த ஜடவுலகத்தைப் போன்று சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அந்த உலகம் தானாகவே பிரகாசமாக உள்ளது. இந்த ஜடவுலகில் சூரிய கிரகம் மட்டுமே சுயப் பிரகாசம் கொண்டுள்ளது. வைகுண்டம் என்று அழைக்கப்படும் அந்த ஆன்மீக உலகிலோ அனைத்து கிரகங்களும் சுயப் பிரகாசமுடையவை. அவற்றின் பிரகாசமே பிரம்மஜோதி.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

இன்ப துன்பத்தை சமமாகக் கருதுதல், மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாகக் காணுதல், பிரியமானவற்றிலும் பிரியமற்றவற்றிலும் சமநிலை கொள்ளுதல், திடமாக இருத்தல், புகழ்ச்சி இகழ்ச்சி மற்றும் மான அவமானத்தில் சமமாக இருத்தல், நண்பனையும் எதிரியையும் சமமாக நடத்துதல் ஆகியவை முக்குணங்களைக் கடந்தவர்களின் நடத்தையாகும்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பரமாத்மா, எல்லா இடங்களிலும் எல்லா உயிர்வாழிகளிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. ஜட இயற்கையே எல்லாச் ச

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பக்தி யோகத்தின் விதிகளை ஒருவனால் பயிற்சி செய்ய முடியாவிடில், கிருஷ்ணருக்காக மட்டும் வேலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய நிலையில் இருப்பவன், கிருஷ்ண பக்தியின் செயல்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யலாம்; அவ்வாறு செயல்படுபவனும் படிப்படியாக பக்குவநிலையை அடைய முடியும்.

Latest news

- Advertisement -spot_img