பன்னெடும் காலத்திற்கு முன்னர், சரஸ்வதி நதிக்கரையில் குழுமிய முனிவர்கள், மும்மூர்த்திகளாக அறியப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவனில் யார் சிறந்தவர் என்று விவாதித்தனர்.
அப்பா, நாம் மழைக்காக இந்திரனை வழிபட வேண்டியதி ல்லை. கடல் இந்திரனை வழிபடுவதில்லை, ஆயினும் அங்கும் மழை பொழிகிறது. அதனால், நம் மாடுகளுக்கு புல்லும் நமக்கு பலவிதமான பழங்களையும் வழங்கும் கோவர்தன மலையை நாம் வழிபடலாமே. சரி அவ்வாறே செய்யலாம். நந்த மஹாராஐர் ஒப்புக் கொண்டார்
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கம்சன் என்ற அசுரன் மதுராவை ஆண்டு வந்தான். அவன் தனது தங்கை தேவகியை சூரசேனரின் மகனான வசுதேவருக்கு மணமுடித்தான், மணமக்களை ரதத்தில் ஏற்றி தானே அதனை ஓட்டிச் சென்றான்