அனைவருக்கும் வேலை வேண்டும், இல்லையேல் சமுதாயத்தில் தொந்தரவு ஏற்படும். சோம்பலான மனம் சாத்தானின் தொழிற்கூடம்.” ஏற்கனவே, பலர் வேலையின்றி இருக்கும்போது எதற்காக இயந்திரங்களை அறிமுகம் செய்து மேலும் பலரை வேலை இழக்கச் செய்ய வேண்டும்? யாரும் வேலையின்றி இருக்கக் கூடாது, அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். அதுவே சிறந்த திட்டமாகும்.
உயிர் உள்ளது-பரம உயிர்-ஆனால் அதைக் காணும் கண்கள்தான் உங்களுக்கு இல்லை. ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன. ஒரு பக்தன் விக்ரஹம் உயிரோட்டமுடன் இருப்பதைக் காண்கிறான். உயிரற்ற உடலை வழிபட நாங்கள் என்ன அயோக்கியர்களா முட்டாள்களா? நாங்கள் பல்வேறு சாஸ்திரங்களைப் படித்த பின்னர், கல்லை வழிபடுவதாக நினைக்கிறீர்களா? உண்மையைக் காண்பதற்கான கண்கள் உங்களிடம்தான் இல்லை. கிருஷ்ணர் விக்ரஹத்தில் இருக்கிறார் என்பதைக் காண உங்களது பார்வையை நீங்கள் புனிதப்படுத்த வேண்டும்.
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மகிழலாம், ஆனால் மகிழ்ச்சி யினால் உங்களது வாழ்க்கையின் குறிக்கோளை மறந்துவிடுகிறீர்களே! அது புத்திசாலித்தனமா? உயர்ந்த பிறவியை அடைவதற்காக மனித உடல் வழங்கப் பட்டுள்ளது. ஒருவேளை அடுத்த பிறவியில் நீங்கள் நாயாகப் பிறக்க நேரிட்டால், அது வெற்றியாகுமா? கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் நாயாவதற்கு பதில் தெய்வீக நபராகலாம்.
“மனப்பான்மை” என்றால் சுதந்திரம். சுதந்திரத்தை சரியாகவோ தவறாகவோ உபயோகிக்கலாம் என்பதை அனைவரும் அறிவர். அதுவே சுதந்திரம். ஒரு வழிப்பாதையாக கீழே விழுவதற்கு வாய்ப்பின்றி இருந்தால், அது பலவந்தப்படுத்துவதாக ஆகிவிடும், அது சுதந்திரமாக இருக்காது. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், யத்தேச்சஸி ததா குரு, “நீ எதை விரும்புகிறாயோ, அதைச் செய்யலாம்.”
நீங்கள் இப்போது வானைப் பார்த்தால், அதனை வெற்றிடமாக நினைக்கலாம், ஆனால் அது வெற்றிடமல்ல. உங்களுடைய கண்களில் குறைபாடு உள்ளது. வானில் எண்ணற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் உள்ளன, உங்களுடைய கண்கள் அவ்விஷயத்தில் குருடாக உள்ளன. உங்களால் இந்த நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்க முடிவதில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா?