இந்த வாரம், திருநாம வாரம். இந்தத் திருநாமம் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால், விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கின்றனர். கோபியர்கள் ராஸ நடனத்தின்போது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உரைக்கின்றனர், அன்னை யசோதை தயிர் கடையும்போது கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கிறாள், விருந்தாவனவாசிகள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை எப்போதும் உரைக்கின்றனர். எனவே, இந்த கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனம், கோலோகேர ப்ரேம தன ஹரி-நாம ஸங்கீர்தன, கோலோக விருந்தாவனத்திலிருந்து கிருஷ்ண பிரேமையைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.