நிருபர்: கடவுளைப் புரிந்து கொள்வதற்கு உங்களது இயக்கம் ஒன்றுதான் வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம்.
நிருபர்: அதை எவ்வாறு நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்கிறீர்கள்?
ஸ்ரீல பிரபுபாதர்: அதிகாரிகளிடமிருந்தும் கிருஷ்ணரிடமிருந்தும் நிச்சயப்படுத்துகிறோம். கிருஷ்ணர் கூறுகிறார்,
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச:
“எல்லா மதங்களையும் கைவிட்டு, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே." (பகவத் கீதை 18.66)
ஒவ்வொரு நாளும் ஆன்மீக ஆர்வம் மக்களிடையே ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது, துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் தவறான நபர்களையே சந்திக்கின்றனர். இலண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு ஸ்ரீல பிரபுபாதர் அளித்த இந்த பேட்டியில், ஆர்வமுள்ள ஒருவர் உண்மையான ஆன்மீகப் பாதையினைக் காட்டும் உண்மையான குருவிற்கும் ஓர் ஏமாற்றுக்காரருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்று விளக்குகிறார்.
ஆன்மீக குரு என்பவர் இதயத்திலுள்ள கவலை என்னும் காட்டுத்தீயினை அணைக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்றும் அதுவே குருவிற்கான முதல் பரிசோதனை என்றும் சென்ற இதழில் கண்டோம். இதர பரிசோதனைகளை இங்கு காணலாம்.
ஏன் ஆன்மீக குரு? ஆன்மீக வாழ்வினுள் நுழைவதற்கு பரம புருஷரின் கருணை, ஆன்மீக குருவின் கருணை ஆகிய இரண்டு விஷயங்கள் அவசியம் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வலியுறுத்தியுள்ளார்: ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ குரு க்ருஷ்ண ப்ரஸாதே
ஆன்மீக விஷயங்களை ஒவ்வொருவரும் தானாக உணர வேண்டும் என்னும் போலியான கருத்தை முறியடிக்கும்வண்ணம் சாஸ்திரங்கள் மற்றும் குருவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கடந்த இரு இதழ்களில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆன்மீக உணர்விற்கு யாரும் தேவையில்லை என்று கூறும் தரப்பினர் (அவர்களுக்கு விடையளிக்கப்பட்டு விட்டது) ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு முற்றிலும் மாற்றுப் பாதையில் இருக்கும் இதர மக்கள் சிலர் ஆன்மீக முன்னேற்றத்திற்கு குருவின் கருணை மட்டுமே போதும், தாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை என்று நினைக்கின்றனர். அவர்களுடைய எண்ணங்களில் உள்ள பிழைகளையும் ஆன்மீக குருவின் உபதேசங்களைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் இந்த இதழில் காணலாம்.