இறக்கும் தருவாயில் பகவானின் திருநாமத்தை அஜாமிளன் பெரும் வேதனையுடன் உச்சரித்ததைக் கேட்ட விஷ்ணு தூதர்கள், உடனடியாக அங்குத் தோன்றினர். அவர்கள் பகவான் விஷ்ணுவைப் போலவே தோற்றமளித்தனர், அவர்களது கண்கள் தாமரை மலர்களின் இதழ்களைப் போன்று இருந்தன, தங்கத்தால் மெருகூட்டப்பட்ட மகுடத்தையும் மஞ்சள் நிறத்தில் பிரகாசிக்கும் பட்டாடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களது கச்சிதமான உடல்கள் நீலக் கற்களாலும், பால் போன்ற வெண் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.