—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
பார்வையாளருக்கும் பங்குதாரருக்கும் உள்ள வேற்றுமையை அனைவரும் அறிவர். ஒரு விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது, அதில் பார்வையாளராக இலட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளலாம். ஆனால் அதில் பங்குதாரராக இருப்பவர்கள் சிலரே. அதாவது, நேரடியாக...
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
கனவான்களே, தாய்மார்களே, பக்தர்களே, ஜகந்நாதரின் ரத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலுள்ள ஜகந்நாத புரியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ரத...
— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
காலம் வெகு விரைவாக மாறி வருகின்றது, நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழும் மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவற்றை கிரகித்து அதற்கேற்ப மாறுவதற்கு நாம் தயாராக இல்லையெனில்,...
கிருஷ்ண பக்தியைப் பயிலுதல், பகவத் கீதையைப் படித்தல், இஸ்கான் இயக்கத்தில் தீவிரமாக பங்குகொள்ளுதல் முதலிய ஆன்மீகச் செயல்கள் அனைத்தும் சமுதாய நிலைகளுக்கு அப்பாற்பட்டவை. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் முதலியவை மட்டுமின்றி, இல்லறத்தில் இருப்பவர்கள், துறவியாக இருப்பவர்கள் என எவ்வித பாகுபாடும் இல்லாமல், அனைவரும் கிருஷ்ண பக்தியில் பங்கேற்கலாம்.
பகவத் கீதை அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. அர்ஜுனன் ஒரு துறவியா என்ன! உண்மையைச் சொல்லப்போனால், பகவத் கீதையைக் கேட்பதற்கு முன்பாக அர்ஜுனன் துறவறம் பூண்டு கானகம் செல்ல விரும்பினான். ஆனால் கீதையைக் கேட்ட பின்னர், கிருஷ்ணரது அறிவுரையின்படி போரிட ஒப்புக் கொண்டான். அவ்வாறு இருக்கையில் கீதையைப் படித்தால் சந்நியாசியாகி விடுவார்கள் என்று சிலர் கூறுவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?