- Advertisement -spot_img

TAG

karma

மஹாபிரபுவின் வினாக்களும் இராமானந்தரின் விடைகளும்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இராமானந்த ராயரிடம் வாழ்வின் இறுதி இலக்கையும் அதனை அடைவதற்கான வழிமுறையையும் கூறுமாறு வினவினார். அதற்கு இராமானந்த ராயர் வர்ணாஷ்ரம முறைப்படி கடமைகளை ஆற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும் என்று முதலில் பதிலுரைத்தார். மஹாபிரபு அந்த கூற்றினை மேலோட்டமானதாகக் கூறி மறுத்தார். அதைவிட ஆழமாகச் செல்லும்படி வேண்டினார். அதனை ஒப்புக் கொண்ட இராமானந்த ராயர் உழைப்பின் பலனை பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தல் (கர்மார்ப்பணம்), கர்மம் கலந்த பக்தி (கர்ம மிஸ்ர பக்தி), ஞானம் கலந்த பக்தி (ஞான மிஸ்ர பக்தி), அனைத்தையும் துறந்து கிருஷ்ணரிடம் சரணடைதல் போன்ற கூற்றுக்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்மொழிந்தார். மஹாபிரபுவோ இவையனைத்தையும் மேலோட்டமானதாகக் கூறி நிராகரித்தார்.

எளிமையாக வாழ்வீர்! ஹரே கிருஷ்ண சொல்வீர்!

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மகிழலாம், ஆனால் மகிழ்ச்சி யினால் உங்களது வாழ்க்கையின் குறிக்கோளை மறந்துவிடுகிறீர்களே! அது புத்திசாலித்தனமா? உயர்ந்த பிறவியை அடைவதற்காக மனித உடல் வழங்கப் பட்டுள்ளது. ஒருவேளை அடுத்த பிறவியில் நீங்கள் நாயாகப் பிறக்க நேரிட்டால், அது வெற்றியாகுமா? கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் நாயாவதற்கு பதில் தெய்வீக நபராகலாம்.

அனைவருக்கும் சமமான நீதி

பௌதிக உலகில் இன்பம் கிடையாது, துன்பம் மட்டுமே உண்டு என்பதை அறிவதே ஆன்மீக உணர்வின் முதல்படியாகும். வாழ்க்கைப் போராட்டத்தில் துன்பத்தை சிறிதளவேனும் குறைக்க முடிந்தால், அதையே நாம் இன்பமாக நினைக்கிறோம்; ஆனால் உண்மையில் இன்பம் என்று ஏதுமில்லை. பகவத் கீதையில் பரம அதிகாரியான கிருஷ்ணர், இந்த ஜடவுலகத்தினை து:காலயம், துன்பம் நிறைந்த இடம்,” என்று கூறுகிறார். இதுவே உண்மை.

வாழ்விற்கான பணமும் பணத்திற்கான வாழ்வும்

நவீன பொருளாதாரம் என்று வேண்டுமானாலும் சரியலாம், பெட்ரோல் முடிந்த பின்னர் அனைத்தும் முடிந்து விடும். பொருளாதார முன்னேற்றத்துடன் இணைந்து வரும் பிரச்சனைகள் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் எண்ணிலடங்காத பிரச்சனைகளைக் கொண்டு வந்துள்ளன என்பதை பலரும் ஏன் காண மறுக்கின்றனர்? கண் இருந்தும் குருடர்களாக வாழ்வது தகுமோ? கண் திறந்து பாருங்கள்:

மனிதன் கீழ்நிலை உடலை அடைதல்

மனிதன் கீழ்நிலை உடலை அடைதல் ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்   ஸ்ரீல பிரபுபாதர்: விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்பவர்கள் ஒரு பொய்யான கோட்பாட்டை நம்பியிருக்கிறார்கள், அனைத்தும் ஜடத்திலிருந்து வருவதாக நினைக்கின்றனர். அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:, "நானே எல்லாவற்றிற்கும் மூலம்" என்று...

Latest news

- Advertisement -spot_img