கிருஷ்ணர் மதுராவிற்கு வந்து, கம்சனின் மல்லர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இது தெரிந்த கதை. அந்த அரங்கினுள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை எவ்வாறு கண்டனர் என்பதே தெரியாத தணுக்கு.
கிருஷ்ணர் மனதினுள் எண்ணினார், பழத்தை வாங்கும் வழி எனக்குத் தெரியும். பண்டமாற்று முறையில் தனது அன்னை பழம் வாங்கியதை கிருஷ்ணர் நினைத்துப் பார்த்தார். சில நெல் மணிகளைக் கொடுத்து பழம் வாங்கலாம் என்று எண்ணிய கிருஷ்ணர், தானிய அறையை நோக்கி ஓடினார்.
விதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் ஒரே மகளான ருக்மிணி பேரழகு வாய்ந்தவள். நாரதரிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் ஐஸ்வர்யங்களையும் கேட்டறிந்த ருக்மிணி தன்னை அவரது பாத கமலங்களில் அர்ப்பணித்தாள், அவரது மனைவியாகி அவருக்கு சேவை செய்ய விருப்பம் கொண்டாள்.
மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்தபோது, துரியோதனன் அவர்களுக்கு பலவிதமான தொல்லைகளைக் கொடுத்தான் என்பது தெரிந்த கதை. அந்த தொல்லைகளில் ஒன்றாக, துர்வாச முனிவரை அவன் அனுப்பி வைத்ததும் அவர் கிருஷ்ணருடைய கருணையினால் எவ்வாறு திருப்தியுற்றார் என்பதும் தெரியாத துணுக்கு.