நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே ஒரே வழி. மற்றவர்களிடம் அன்பு செலுத்த முயற்சித்தால், இறுதியில் நீங்கள் விரக்தியை அடைவீர். ஏனெனில், நமது அன்பிற்குரியவர் கடவுள் ஒருவரே. அவரை நாம் நேசிக்கும்போது, இயற்கையாகவே நம்மால் அனைவரையும் நேசிக்க இயலும். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றினால் அது கிளைகள், இலைகள், பூக்கள் என அனைத்திற்கும் செல்கிறது.
கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணரிடம் பிரேமை (தூய அன்பு) உடையவர்கள் மட்டுமே அவரைக் காண இயலும். கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதற்கான விருப்பம் நம்மிடம் ஏற்கனவே உள்ளது. ஆனால் அதை நாம் மாயைக்கு மாற்றம் செய்துவிட்டோம். மாயையிடம் உள்ள அன்பை மீண்டும் கிருஷ்ணரிடம் செலுத்துவதே கிருஷ்ண உணர்வின் ஒட்டுமொத்த செயல்முறையாகும். இதுவே கிருஷ்ண உணர்வைப் பற்றிய எளிமையான விளக்கம். கிருஷ்ணருக்கான அன்பு நம்மிடம் உள்ளது, ஆனால் அந்த அன்பு தற்போது தவறான இடத்தில், மாயையிடம் உள்ளது. கிருஷ்ணரல்லாத ஒன்றிடம், மாயையிடம் அன்பு செலுத்த நாம் முயற்சிக்கிறோம். இது கிருஷ்ணரது மாயையாகும்.