கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலர் தனது ஏழ்மையை போக்குவதற்காக, கிருஷ்ணர் துவாரகையிலிருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்றார் என்பதையும், கிருஷ்ணரைச் சந்தித்த மகிழ்ச்சியில் எதையும் கேட்காமல் திரும்பி வந்தார் என்பதையும், கிருஷ்ணர் அவருக்கு இந்திர லோகத்து செல்வத்தைக் காட்டிலும் அதிக செல்வத்தை வழங்கினார் என்பதையும் பெரும்பாலான மக்கள் அறிவர். குசேலர் எதற்காக வந்தார் என்பதை நன்கு அறிந்திருந்த கிருஷ்ணர் தான் கொடுக்க விரும்பியதை அவர் வந்த சமயத்தில் நேரில் கொடுத்திருக்கலாமே? ஏன் முதுகிற்கு பின்னால் கொடுக்க வேண்டும்?