தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஜடவுலகிலுள்ள அனைவரும் எவ்வாறு பாலுறவில் மயங்கியுள்ளனர் என்பதையும், அதிலிருந்து வெளிவருவதற்கான வழியையும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.
பாலுறவே ஜட வாழ்வின் அடிப்படை
இந்த ஜடவுலகிலுள்ள அனைவரும் உடலுறவால் ஈர்க்கப்படுகின்றனர். ஸ்ரீமத் பாகவதம்...
பிறப்பு, இறப்பு என்னும் சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் கலி யுக மக்களுக்கு ஒரு நற்செய்தி. பகவான் கிருஷ்ணரின் லீலைகளைச் செவியுறுவதன் மூலமாக நாம் வாழ்வின் பந்தத்திலிருந்து எளிதில் விடுபட இயலும். கிருஷ்ணர் தெய்வீக ரஸங்களை அனுபவிப்பதற்காக தம்மை எண்ணற்ற ரூபங்களில் விரிவுபடுத்திக் கொண்டு பல்வேறு லீலைகளைப் புரிகின்றார். அந்த லீலைகள் அனைத்தும் நம்மைப் போன்ற கட்டுண்ட ஆத்மாக்களை பிறவித் துயரிலிருந்து விடுவிப்பவை. அசுரர்களைக் கொல்லும் லீலையாக இருந்தாலும், பக்தர்களுடனான அன்புப் பரிமாற்ற லீலையாக இருந்தாலும், அவர் வழங்கும் உபதேசமாக இருந்தாலும், அவரது திருமண லீலையாக இருந்தாலும், அவை அனைத்தும் நம்மை மேம்படுத்தக்கூடியவை.