- Advertisement -spot_img

TAG

parikshit

மாமன்னர் பரீக்ஷித்தின் இரண்டு கதைகள்

மாமன்னர் பரீக்ஷித்தின் கதையை எடுத்துரைப்பதில், ஸ்ரீமத் பாகவதமும் மஹாபாரதமும் வேறுபடுகின்றன. என்ன வேறுபாடு? ஏன்? ஸ்ரீமத் பாகவதத்தின்படி, ஏழு நாளில் தக்ஷகனால் மரணமடைவோம் என்பதை அறிந்த மாமன்னர் பரீக்ஷித் உடனடியாக அனைத்தையும் துறந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் செவியுற்றார்,...

மாமன்னர் பரீசஷித்

மாமன்னர் பரீக்ஷித் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கு ஓர் மானை பின்தொடர்ந்து நெடுந்தூரம் சென்றதால் களைப்படைந்தார், தாகத்திற்காக நீரைத் தேடி சமிக ரிஷியின் ஆசிரமத்தை அடைந்தார். தியானத்திலிருந்த சமிக ரிஷியிடம் குடிப்பதற்கு நீர் வேண்டினார்.

பரீக்ஷித் மகாராஜரின் கேள்விகள்

ஸ்ரீமத் பாகவதத்தை ஒழுங்காகக் கேட்பவர்கள் மற்றும் இவ்விஷயத்தை எப்போதும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விரைவில் எழுந்தருள்வார். அவர் ஸ்ரீமத் பாகவதம் என்னும் சப்த அவதாரமாக தன்னுணர்வு பெற்ற ஒரு பக்தனின் இதயத் தாமரைக்குள் புகுந்து பௌதிக சகவாசத்தால் விளைந்த காமம், கோபம், பேராசை முதலான அழுக்குகளைப் போக்கிவிடுகிறார்.

கலி பெற்ற பரிசும் தண்டனையும்

ஓர் ஆதரவாளராக அல்லது விஷமியாக இருப்பதற்கு யாரும் நேரடியான பொறுப்பாளியல்ல என்பது பக்தர்களின் முடிவாகும். எனவே, தீங்கு செய்பவர் அல்லது விஷமியை அடையாளம் காண்பவரும் அந்த விஷமிக்குச் சமமான பாவம் செய்தவராகவே தெரிகிறார். பகவானின் கருணையால் பக்தர் எல்லா தீமைகளையும் பொறுத்துக் கொள்கிறார். பக்தனுக்குத் துன்பமே இல்லை; ஏனெனில், அனைத்திலும் பகவானையே காணும் பக்தருக்கு பெயரளவேயான அத்துன்பமும் கூட பகவானின் கருணையே. பிறரால் துன்புறுத்தப்படும்போது பொதுவாக மக்கள் அரசாங்க அதிகாரிகளிடம் புகார் செய்வார்கள். ஆனால் கலி புருஷனால் சித்ரவதை செய்யப்பட்டதைக் குறித்து பசுவும் எருதும் அரசரிடம் எந்த புகாரும் செய்யவில்லை. எருதின் அசாதாரணமான நடத்தையைக் கொண்டு அது நிச்சயமாக தர்ம தேவனாக இருக்க வேண்டும் என்று அரசர் முடிவு செய்தார். ஏனெனில், மதக் கோட்பாடுகளின் மென்மையான நுட்பங்களை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

பரீக்ஷித் கலியை வரவேற்ற விதம்

பரீக்ஷித் கலியை தண்டித்ததைப் பற்றி கேள்விப்பட்ட சௌனக ரிஷி, அவ்விஷயம் கிருஷ்ணரோடு தொடர்புடையதாக இருப்பின் விரிவாக விளக்குமாறு வேண்டினார். பகவத் பக்தர்கள் பகவானின் தாமரைப் பாதங்களிலிருந்து கிடைக்கும் தேனைச் சுவைப்பதில் பழக்கப்பட்டவர்கள். பகவானின் புனித நாமம் மற்றும் லீலைகளை கேட்பதும் பாடுவதும் மரணத்தின் பிடியிலிருந்து தப்புவதற்குரிய ஒரே வழியாகும். எமராஜன் பகவானின் மிகச்சிறந்த பக்தர் என்பதால், பகவானின் பக்தித் தொண்டில் இடைவிடாமல் ஈடுபட்டுள்ள தூய பக்தர்களின் கீர்த்தனங்களுக்கும் யக்ஞங்களுக்கும் அழைக்கப்படுவதை அவர் பெரிதும் விரும்புகிறார். எனவே, சௌனகரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் நைமிஷாரண்யத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்திற்கு எமராஜரையும் அழைத்திருந்தனர். மரணமடைய விரும்பாத வர்களுக்கு அது நல்ல பலனை அளித்தது.

Latest news

- Advertisement -spot_img