கிருஷ்ண பக்தியையும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தையும் உலகின் ஒவ்வொரு கிராமங் களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு செல்வதற்கான அருமையான ஏற்பாடு, இஸ்கானின் அகில இந்திய பாத யாத்திரைக் குழு. அழகிய மாடுகள் பூட்டிய ரதத்தில்...
லஹர்ட்: நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை அமெரிக்க நாட்டில் எவ்வாறு நிறுவினீர்கள் என்பது குறித்து கூற இயலுமா?
ஸ்ரீல பிரபுபாதர்: இந்த பணியைச் செய்யும்படி நான் எனது ஆன்மீக குருவினால் கட்டளையிடப்பட்டேன், அதன்படி நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இங்கு தனியாக வந்தேன், எந்த உதவியும் பணமும் என்னிடம் இருக்கவில்லை. எப்படியோ நான் இங்கு தொடர்ந்து தங்கிவிட்டேன்
இன்றைய இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள மாயாபுரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதே சாந்திபுரம் என்னும் திருத்தலம். சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் தோன்றுவதற்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்த அத்வைத ஆச்சாரியர் இவ்விடத்தில் வசித்ததால்,
சென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் சமீபத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கன மழை படிப்படியாக வெள்ளக்காடாக மாறியபோது பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் கண்முன் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குடியிருப்புகள் ஆழமான நீச்சல்குளம் போல் திடீரென உருவானதை கண்ட மக்கள் மனபிரம்மைக்கு உள்ளாகி செய்வதறியாது தவித்தனர். இயற்கை சீற்றத்தின் கோர தாண்டவத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கே பரிதவித்தனர்.
பகவான் ஸ்ரீ கௌராங்கர் (சைதன்ய மஹாபிரபு) விஜயம் செய்து தமது லீலைகளை அரங்கேற்றிய இடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுவுடன் அழைத்துச் செல்லும் பகவத் தரிசன யாத்திரை சேவாதாரிகளுக்கு எனது முதற்கண் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.