அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக...
பிரம்மா தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்தார்: “பகவானே, உமது பக்தர்கள் உம்மைப் பற்றி முறையாகக் கேட்கும்போதே உம்மைக் காண்கின்றனர். இதனால் அவர்களது இதயம் தூய்மையடைகிறது. அதில் தாங்கள் கருணையுடன் வந்தமர்ந்து தங்களது நித்ய வடிவத்தில் தரிசனம் தருகிறீர்கள். ஆனால் லௌகீகப் பேராசைகளில் ஆட்பட்டு ஆடம்பரமாக உம்மை வழிபடும் தேவர்களிடம் தாங்கள் மனநிறைவு அடைவதில்லை. மேலும், பக்தரல்லாதோர்க்கு தாங்கள் கானல் நீர்போன்று அவர்கள் காண இயலாத வண்ணம் ஒதுங்கி விடுகிறீர்கள்.