கொரோனா என்னும் கொடிய நோய் அனைவரையும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) பாதித்துள்ளது. முக கவசம், சமூக இடைவெளி முதலியவற்றையும் மீறி, துரதிர்ஷ்டவசமாக, நமக்கும் கொரோனா வந்தால், என்ன செய்ய வேண்டும்? அரசாங்கமும் மருத்துவர்களும் வழங்கக்கூடிய சிகிச்சைகளுக்கு பூரண ஒத்துழைப்பு தருவதுடன் இணைந்து, பக்தர்கள் (உண்மையில், எல்லா மக்களும்) கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றினால் நிச்சயம் நன்மை விளையும்.
பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு மனித உடலை அடைவது மிகமிக கடினமாகும், அப்படியே அடைந்தாலும், அதை எந்த நொடியிலும் இழந்துவிடக் கூடும். ஆனால் மனித வாழ்வைப் பெற்றவர்கள்கூட, வைகுண்ட நாதருக்கு பிரியமான தூய பக்தர்களின் சகவாசத்தை அரிதாகவே பெறுகின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.2.29)
பற்பல பிறவிகளைக் கடந்தபின், உண்மையான அறிவுடையவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.” (பகவத்கீதை 7.19)
ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள வேறுபாட்டை ஒருவன் அறிந்துகொள்ளாவிடில், மறுபிறவியை அவனால் புரிந்துகொள்ள இயலாது. ஆத்மாவின் தன்மையை நாம் அறிவதற்காக, பின்வரும் உதாரணத்தைக் கொண்டு கீதை (13.34) உதவி செய்கிறது: “ஒரே ஒரு சூரியன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப் போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகிறான்.”
மேலை நாடுகளின் ஆதிக்க சக்திகள் அங்கிருந்த மக்களிடம் மறுபிறவி குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை பல நூற்றாண்டுகளாக தடுத்துவிட்டது. ஆனால் மேலை நாட்டின் வரலாற்றிலும், உயிர் நித்தியமானது என்றும் அஃது ஓர் உடலிலிருந்து மற்றொன்றுக்கு மாறிச் செல்கிறது என்றும் புரிந்து கொண்ட சிந்தனையாளர்கள் இருக்கத்தான் செய்துள்ளனர். ஏராளமான தத்துவஞானிகள், நூலாசிரியர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், மற்றும் அரசியல்வாதிகள் இக்கருத்திற்கு ஆழ்ந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்