மஹாபிரபுவின் மூத்த சகோதரரான விஸ்வரூபர் சந்நியாசம் ஏற்ற பின்னர், அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரைத் தேடுவதாக காரணம் கூறி, கௌராங்கர் தென்னிந்தியா செல்ல விரும்பினார். எனினும், அவரின் தென்னிந்தியப் பயணத்திற்கான உண்மையான காரணம், அங்குள்ள ஒவ்வொருவரையும் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் களங்கமற்ற பக்திப் பாதைக்கு மாற்றுவதே. மஹாபிரபுவின் பயணத்தை அறிந்த அவரது பக்தர்கள் அனைவரும் நித்யானந்த பிரபுவின் தலைமையில் அவருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்; ஆயினும், மஹாபிரபு தனியாகச் செல்வதையே வலியுறுத்தினார்.