- Advertisement -spot_img

TAG

sri ramanujar

காரேய் கருணை இராமானுஜா!

ஆச்சாரியர் என்பவர் ஜடவுலக வாழ்வின் அன்றாடத் துயரங்களைப் போக்குபவர் அல்லர், அவர் ஜடவுலக வாழ்க்கை என்னும் ஒட்டு மொத்த துயரத்தையும் போக்குபவர். நவீன காலத்தில் ஆன்மீகப் பணிகள் என்ற பெயரில், பலரும் பௌதிக சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். மருத்துவமனை திறத்தல், பள்ளிகளைத் திறத்தல், அன்னதானம் வழங்குதல் முதலிய பல்வேறு சமூக சேவையில் ஈடுபடுவோரை மக்கள் ஆன்மீகவாதிகள் என்று அங்கீகரித்து அவர்களைப் போற்றிப் புகழ்கின்றனர். ஆனால் உண்மையில் அத்தகு பௌதிகமான சமூக சேவைகள் எதுவும் ஆச்சாரியர்களின் பணியல்ல. ஆச்சாரியர்கள் மக்களுக்கு உண்மையான சேவையை வழங்க வல்லவர்கள். அதாவது, மக்களை முற்றிலுமாக பௌதிகப் பெருங்கடலிலிருந்து காப்பாற்றக்கூடியவர்கள். உடல் சார்ந்த சேவைகள் அனைத்தும் தற்காலிகமானவை, ஆத்மாவைக் காப்பாற்றும் பணியே உண்மையான சேவை, அதைச் செய்வோரே உண்மையான ஆச்சாரியர்கள்.

இராமானுஜரின் வாழ்க்கை -முக்கிய நிகழ்வுகள்

சிறப்புத் திருநாமங்கள்: (1) எம்பெருமானார், (2) யதிராஜர் (துறவிகள் வேந்தர்), (3) உடையவர், (4) திருத்திப் பணிகொண்டான், (5) திருப்பாவை ஜீயர், (6) காரேய் கருணை இராமானுஜர்

ஸ்ரீ இராமானுஜரின் வழியில்

இராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்றொரு பெயரும் உண்டு. திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்குலப் பெண்ணாகப் பாவித்து கோபியர்களின் மனோபாவத்தினைப் புகழ்ந்திருப்பாள். ஸ்ரீ இராமானுஜர் தன்னுடைய சீடர்களை அந்த பாவத்தினைப் பின்பற்றச் சொல்லவில்லை என்றாலும், அவர் அந்த அர்த்தங்களால் பெரிதும் மயங்கி, தினமும் யாசிக்கச் செல்லும்போதெல்லாம் திருப்பாவையைப் பாடுவார். கிருஷ்ணரை வழிபடுவதற்கு மிகவுயர்ந்த வழிமுறை கோபியர்களின் மனோபாவமே என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு உரைத்துள்ளார். பக்தர்கள்

Latest news

- Advertisement -spot_img