- Advertisement -spot_img

TAG

srila prabhupada lecture

வாழ்வில் வெற்றியடைய…

ஒருவன் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டறியாத வரை, அவன் அறியாமையினால் எழும் துன்பங்களுக்கு ஆளாகி வீணாகிறான். பாவமாயினும் புண்ணியமாயினும் எல்லாச் செயல்களுக்கும் (கர்மத்திற்கும்) உரிய விளைவுகள் உண்டு. ஒருவன் கர்மத்தில் ஈடுபட்டிருந்தால், அஃது எத்தகையதாக இருந்தாலும், அவனது மனம் கர்மாத்மக, அதாவது, பலன்நோக்குச் செயல்களால் நிறைந்ததாகும். மனம் களங்கமாக இருக்கும் வரை உணர்வு தெளிவாக இருக்காது. பலன்நோக்குச் செயல்களில் ஒருவன் மூழ்கியிருக்கும் வரை, அவன் பௌதிக உடலை ஏற்றாக வேண்டும்.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.5)

கிருஷ்ண உணர்விற்கு அவசரமா?

நமக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவு மட்டுமே உண்மையான உறவு என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பதே நமது கடமை; அவ்வாறு நாம் செயல்பட்டால் நமது வாழ்க்கை வெற்றியடையும். ஆனால் சில சமயங்களில், கடவுள் இல்லை”, நானே கடவுள்”, கடவுளைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று சிலர் சவால் விடுவதும் உண்டு. இவ்வாறு சவால் விடுவதால் யாரும் காப்பாற்றப்படப் போவதில்லை. கடவுள் இருப்பதை ஒவ்வொரு கணமும் நம்மால் காண முடியும். வாழும்பொழுது கடவுளை ஏற்க மறுத்தால், கொடூரமான மரணத்தின் வடிவில் அவர் நம்முன் தோன்றுவார். நாம் அவரை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் காண விரும்பாவிடில், வேறோர் உருவத்தில் அவரை நாம் காண வேண்டிவரும். விஸ்வரூபத்தின் மூல காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளுக்குப் பல்வேறு ரூபங்கள் உள்ளன. வேறுவிதமாகக் கூறினால், அவரிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

பிணத்திற்குச் செய்யும் அலங்காரம்

உண்மையில், நாம் வாழும் இந்த உடலானது இறந்த உடல் என்பதே உண்மை. ஆரம்பத்திலிருந்தே இந்த உடலானது இறந்த உடலாகும். ஏனெனில், இந்த உடல் ஒரு ஜடப் பொருள். ஜடத்திற்கு என்றுமே உயிர் கிடையாது. நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றினால் உருவான இந்த ஸ்தூல சரீரம் உயிரற்ற ஜடமாகும். சிறிய ஆன்மீகப் பொறி என்னும் ஆத்மா இதனுள் இருக்கின்ற காரணத்தினால், அஃது உயிரோட்டத்துடன் இருக்கின்றது. இதையே நாம் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம், தேஹினோ யதா தேஹே, உடலினுள் சிறிய ஆன்மீக பொறி உள்ளது. இதுவே, ஆன்மீக உணர்வின் முதற்படியாகும்.

துறவி என்பவர் யார்?

மனக்கற்பனையிலும் புலனின்பத்திலும் ஆர்வமுடன் இருக்கும் பௌதிகவாதிகள், ஆத்மாவைப் பற்றி அறியாது உடல்சார்ந்த வாழ்வில் ஆர்வமுடன் உள்ளனர். இந்தியாவின் பிரபலமான சாதுக்களில் பலரும்கூட மனக்கற்பனையில் ஆர்வம் செலுத்துகின்றனர். அவர்கள் பக்குவமானவர்கள் இல்லை. உடல்சார்ந்த வாழ்வைப் புரிந்துகொள்வதில் ஆர்வமுடன் இருப்பவர்கள் பௌதிகவாதிகளே. துரதிர்ஷ்டவசமாக அரசியல், சமூகம், தத்துவம் முதலியவற்றிக்குத் தலைமை தாங்குபவர்களும் பௌதிகவாதிகளாகவே இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோரை யோகிகளாகவும் கடவுளின் அவதாரமாகவும் மக்கள் ஏற்கின்றனர். இத்தகையவர்களால் தவறாக வழிநடத்தப்படும் உலகம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கின்றது.

ஆனந்தமான ஆன்மீக உலகை அடைதல்

பகவானிற்கு இரு சக்திகள் உள்ளன. ஒன்று பௌதிக சக்தி, மற்றொன்று ஆன்மீக சக்தி. பௌதிகம், ஆன்மீகம் ஆகிய இரு சக்திகளில், ஆன்மீக சக்தி உயர்ந்தது, பௌதிக சக்தி தாழ்ந்தது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, மற்றும் அஹங்காரத்தால் ஆனது பௌதிக சக்தி. ஆன்மீக சக்தியானது உயிருள்ளதாகும். நாம் அனைவரும் இவ்விரு சக்திகளின் கலவைகளே. இது பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: யயேதம் தார்யதே ஜகத். இந்த மொத்த உலகமும் இவ்விரு சக்திகளால் இயங்குகிறது. வெப்பமும் ஒளியும் சூரியனிலிருந்து வருவதைப் போல இவ்விரு சக்திகளும் ஒரே மூலத்திலிருந்து வருகின்றன.

Latest news

- Advertisement -spot_img