ஸ்ரீல பிரபுபாதர்: இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கும்படி தங்களது ஐக்கிய நாட்டு சபையிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் மனிதனாகப் படைக்கப்பட்டுள்ளேன், அதே போல யானைகளும் எறும்புகளும்கூட படைக்கப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன? சூரியனும் சந்திரனும் சரியான நேரத்தில் உதிக்கின்றன, பருவ காலங்கள் மாறுகின்றன. இவற்றின் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?
ஸ்ரீல பிரபுபாதர்: பறவைகளும் விலங்குகளும் தங்களது இனத்தைப் பெருக்குகின்றன. அவற்றிற்கு உணவளிப்பவர் யார்? உலகில் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன; அவற்றில் 80 இலட்சம் உயிரினங்கள் மனித இனத்தைச் சார்ந்தவை அல்ல. நான்கு இலட்சம் உயிரினங்கள் மட்டுமே மனித இனம். அதிலும் நாகரிகமடைந்தவர்கள் சிலரே. அனைத்து பிரச்சனைகளும் இந்த பெயரளவு நாகரிகமான மக்களிடம் மட்டுமே உள்ளது.
ஒருமுறை பிரபுபாதருடன் நாங்கள் நடந்துக் கொண்டிருக்கையில், ஓரிடத்திலிருந்த புல் அனைத்தும் மஞ்சள் நிறத்துடன் காட்சியளித்தன. அச்சமயத்தில், அங்கே நின்றுவிட்ட ஸ்ரீல பிரபுபாதர் அந்தப் புல்லைக் காட்டி வினவினார், “புல் சில இடங்களில் பச்சையாகவும் சில இடங்களில் மஞ்சளாகவும் இருப்பது ஏன்?”
உங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்
இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லை, அவர்கள் எவ்வாறு நாம உச்சாடனத்தில் ஈடுபடுவது என்பதை அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்குடன் ஸ்ரீல பிரபுபாதர்...
ஸ்ரீல பிரபுபாதர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பாக பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சுமார் 30பேர் அமர்ந்திருந்த இடத்தில், அங்கிருந்த எல்லா ஏற்பாடுகளையும் செய்தவன் “நானே” என்ற அகந்தையுடன் கடைசியாக வந்து சேர்ந்தேன். அனைவரையும் ஓரமாக ஒதுக்கி விட்டு, முன்வரிசைக்குச் சென்று பிரபுபாதருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். என்னுடன் வந்த கனசியாமர் அமைதியாகவும் பணிவாகவும் வாயிலில் அமர்ந்து விட்டார்.