வேத இலக்கியங்களில் இந்து சமயம் எனும் வார்த்தையே கிடையாது. சமயம் என்பது ஒருவகையான நம்பிக்கையல்ல. தர்மம் (அல்லது சமயம்) என்பது உயிர்வாழியின் நித்திய இயற்கை. இதனை இரசாயனக் கலவையுடன் ஒப்பிடலாம். சர்க்கரை இனிப்பானதுஶீஅதுவே அதன் இயற்கைத் தன்மை, தர்மம். சர்க்கரை என்பது இனிப்பாகத்தான் இருக்க வேண்டும், காரமாக இருக்கவியலாது. மிளகாய் காரமாகவே இருக்க வேண்டும், இனிப்பானதாக இருந்தால் அதனை நிராகரித்து விடுவோம். சர்க்கரை காரத்தன்மையுடன் இருந்தால், அதனை நிராகரித்து விடுவோம்.
கடவுள்குறித்து கேட்பதற்குக்கூட மக்கள் தயாராக இல்லை, இந்த நிலைக்கு காரணம் என்ன? போஸ்டனில் பாதிரியார் ஒருவரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் கூறினார், உங்களது சீடர்கள் அனைவரும் கிறிஸ்தவம் அல்லது யூத மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முன்பு அவர்கள் தேவாலயங்களுக்கு வந்ததில்லை, இறைவனைக் குறித்து ஒருபோதும் வினவியதில்லை. ஆனால் இன்று அதே ஆண்களும் பெண்களும் இறைவனுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்.”
நோயாளி ஒருவன் மருத்துவரிடம் சென்று தனது உடலின் நோயை குணப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளான், அதில் கவனக் குறைவாக இருப்பது தனது உடலைப் பாதிக்கும் என்பதை அவன் நன்கு அறிந்துள்ளான். ஆனால் அதே வேளையில் உடலுக்குள் கட்டுண்டு கிடப்பதே தன்னுடைய (ஆத்மாவின்) உண்மையான நோய் என்பதையும் அதை குணப்படுத்துவதற்கான மருத்துவத்தை அறியாதவனாகவும் அவன் உள்ளான். ஆத்மாவைப் பற்றிய உயர்ந்த அறிவு, சிந்தனைகள், மன நிம்மதி உள்ளிட்ட பூரண ஞானத்தையும் பக்தியையும் அளிக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் விலை மதிப்பற்றவை.
கடவுளைப் பற்றிய விஞ்ஞான அறிவிற்கு உணர்ச்சிகள் தேவையில்லை. உணர்ச்சிகள் தேவையே இல்லை. அவை உபயோகமற்றவை. கடவுளைப் பற்றிய அறிவு உண்மையானதாக இருக்க வேண்டும், உணர்ச்சிகளால் எந்தப் பயனும் இல்லை. பக்தியின் மிகவுயர்ந்த நிலையில் உணர்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால் கடவுளைப் பற்றிய ஆரம்ப விஞ்ஞான அறிவைப் பெறுவதற்கு உணர்ச்சிகள் தேவையில்லை.
நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள்
1975ஆம் ஆண்டின் மார்ச் 5ஆம் நாள், நியூயார்க்கின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீல பிரபுபாதருக்கும் நிருபர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்.
நிருபர் 1: சுவாமிஜி, உங்களது இயக்கத்தைப்...