ஸ்வாமிஜி தினமும் மாலை வேளையில் ஆரத்தி செய்தார், அவரைக் காண வந்தவர்கள் அதனை என்னவென்று அறியாமல், மணி வாசித்தல் என்று அழைத்தனர். படிப்படியாக ஸ்வாமிஜி தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் இந்திய கலாசாரத்தை அறிமுகப்படுத்தினார். கிருஷ்ணரிடம் சரணடைவது என்பது அவர்களுக்கு ஆச்சரியமானதாக இருந்தது. அவர்கள் தற்போது நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்ள தொடங்கினர்.
ஸ்ரீல பிரபுபாதர்: மான்ட்ரியலில் ஒரு வங்காள கனவான் கேள்வி எழுப்பினார், “சுவாமிஜி நீங்கள் மிகவும் பலமான வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள்--முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள்." இதனை வேறு விதங்களில் விளக்க இயலாதா?"
நான் பதிலளித்தேன், “இல்லை. இவையே...
ஸ்ரீ-பிரஹ்லாத உவாச
மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா
மிதோ ’பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம்
அதான்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம்
புன: புனஷ் சர்வித சர்வணானாம்
"பிரகலாத மஹாராஜர் கூறினார்: பௌதிக வாழ்வின்மீது மிகவும் பற்றுதல் கொண்டுள்ள நபர்கள் தங்களுடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினால், நரக சூழ்நிலையை நோக்கி முன்னேறுகின்றனர். ஏற்கனவே மென்றதை மீண்டும்மீண்டும் மென்று வருகின்றனர்.
இரண்டு நாள் கழித்து, 19 செப்டம்பர் அன்று ஜலதூத கப்பல் நியூயார்க் துறைமுகத்தை அடைந்தது. முறையான வைஷ்ணவ சந்நியாசியின் தோற்றத்தில் நியூயார்க் நகரத்திற்கு வந்த முதல் நபர் இவரே. அவர் நேரடியாக பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் பகுதிக்குச் சென்றார், அங்கு அவரை திரு. கோபால் அகர்வால் வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
இரண்டாம் உலகப் போரின் ஒரு காலக் கட்டத்தில், ஆங்கிலேயர்கள் உணவுப் பொருட்களைத் தாங்கிய படகுகளை மூழ்கடித்தனர், பல்வேறு நெல் வயல்களை அழித்தனர்-எதிரிகள் அவற்றைக் கைப்பற்றி விடக் கூடாது என்று பயந்தனர். இது வங்காளத்தில்...