- Advertisement -spot_img

TAG

srila prabhupada

தபால் பெட்டியில் தபால் போடுவதைப் பார்த்து…

புரோக்லின் நகரின் கிழக்கு நதிக்கரையில் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், ஸ்ரீல பிரபுபாதரும் நானும் ஹென்றி தெருவில் உள்ள நமது கோயிலுக்கு காரில் திரும்பினோம். கோயிலுக்குள் நுழைவதற்கு சற்று முன்பாக, வீதியின் ஓரத்தில் ஒரு காட்சியைக் கண்டோம். அங்கே சிறுவன் ஒருவன் தபால் பெட்டியில் தபால் போட முயன்றான், அவனுடன் வந்திருந்தவர் அவனைத் தூக்கி அவனுக்கு உதவினார். அக்காட்சி ஐந்து அல்லது பத்து நொடிகள் மட்டுமே இருந்திருக்கும். ஆயினும், காரில் இருந்தபடி அதைக் கண்ட பிரபுபாதர் அக்காட்சியில் ஆழ்ந்தார். அவரது கண்கள் பெரிதாகி, பிரகாசமாயின, அவரது கவனத்தில் அக்காட்சி மட்டுமே இருந்தது.

சமுதாயத்தில் பிராமணர்கள் தேவையா?

1971இல் ஸ்ரீல பிரபுபாதர் சோவியத் யூனியனில் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின்போது சோவியத் விஞ்ஞானக் கழகத்தின் இந்தியத் துறையின் தலைவரும் மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் இந்தியப் பிரிவின் தலைவருமான பேராசிரியர் க்ரிகோரி கடோவ்ஸ்கியை சந்தித்தார். ஆன்மீகத் தலைவரான ஸ்ரீல பிரபுபாதரும் பொதுவுடைமை அறிஞரான கடோவ்ஸ்கியும் இந்தியாவின் வர்ணாஷ்ரம முறையைப் பற்றி இங்கு விவாதிக்கின்றனர்.

இந்தியாவில் பண்பாடு இன்னும் எஞ்சியுள்ளது

டிசம்பர் 18, 1972, மும்பை: தினசரி காலை நானும் சியாமசுந்தர தாஸும் ஸ்ரீல பிரபுபாதருடன் இணைந்து, கார்த்திகேயனின் அம்பாசிடர் காரை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்று, அங்கே சிறிது நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஒருநாள் காலை, நடைப்பயிற்சியை முடித்து விட்டு அனைவரும் காருக்கு வந்தோம்; சியாமசுந்தர் சாவியை உள்ளிட்டு காரை ஸ்டார்ட் செய்கிறார், ஆனால் எவ்வளவோ முயன்றும் அது ஸ்டார்ட் ஆகவில்லை.

தியானத்தினால் ஏமாறும் மக்கள்

தியானத்தினால் ஏமாறும் மக்கள் தியானம் என்ற பெயரில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பதுகுறித்து, ஸ்ரீல பிரபுபாதர் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது திரு. ஃபையில் என்பவருடன் நிகழ்ந்த பேட்டியின் ஒரு பகுதி. திரு. ஃபையில்: தியானம் மக்களுக்கு உபயோகமாக...

குற்றமற்ற அறிவைப் பெற டார்வினை நம்புவதா? கிருஷ்ணரை நம்புவதா?

குற்றமற்ற, பக்குவமான அறிவைப் பெற விரும்பும் மக்கள் மன அனுமானத்தினால் உருவான டார்வின் போன்ற விஞ்ஞானிகளை ஏற்பதற்கு பதிலாக, குற்றமற்ற நபரிடமிருந்து குற்றமற்ற அறிவைப் பெற வேண்டும் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் மானுடவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கேரோல் கெமெரோனுடன் உரையாடுகிறார். ஸ்ரீல பிரபுபாதர்: நமது வாழ்நாள் எழுபது அல்லது எண்பது வருடங்களே. இருந்தும்கூட டார்வினுடைய கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான ஆண்டுகளைக் கணக்கிடுகின்றனர்.

Latest news

- Advertisement -spot_img