முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தை நிலைநாட்டுவதற் காகவும் தமது ஆன்மீக உலகின் அன்பான லீலைகளை நமக்கு வெளிப் படுத்துவதற்காகவும், சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு இப்பூமியில் அவதரித்தார். அவர் தமது லீலைகளை முடித்து திருநாட்டிற்கு திரும்பிச் சென்ற பின்னர், இவ்வுலகம் அறியாமை மற்றும் அதர்மத்தின் இருளில் மூழ்கியது.
ஸ்ரீமத் பாகவதத்தின் ஆறாவது காண்டத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை
மன்னர் சித்ரகேது சூரசேன நாட்டை மையமாகக் கொண்டு உலகம் முழுவதையும் ஆட்சி செய்து வந்தார். சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த சித்ரகேதுவிற்கு பல மனைவியர்...
ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடமிருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். இது வேத வியாசர் இயற்றிய பதினெட்டு புராணங்களில் ஒன்றாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.