- Advertisement -spot_img

TAG

srimad bhagavatam

இந்திரன் பிருஹஸ்பதியை அவமதித்தல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12...

தக்ஷன் நாரதரை சபித்தல்

பகவானின் மாயா சக்தியால் தூண்டப்பட்டு பிரஜாபதி தக்ஷன், அஸிக்னி என்ற பாஞ்சஜனீயின் மூலம் பத்தாயிரம் மகன்களைப் பெற்றார். அந்த மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணத்தில் சாந்தமானவர்களாகவும் பணிவுமிக்கவர்களாகவும் இருந்தனர். தந்தையின் கட்டளையை ஏற்று, மேற்கில் சிந்து நதி கடலுடன் சங்கமிக்கும் நாராயண சரஸ் என்னும் புனித தீர்த்தத்திற்குச் சென்றனர்.

ஹம்ஸ குஹ்ய பிரார்த்தனைகள்

அஜாமிளனின் வரலாற்றை அறிந்த பின்னர், பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் பின்வருமாறு வேண்டினார். “ஸ்வாயம்புவ மனுவின் ஆட்சிக் காலத்தில் பலவித ஜீவராசிகள் படைக்கப்பட்டதை (மூன்றாம் ஸ்கந்தத்தில்) விளக்கினீர்கள். இதைப் பற்றி மேலும் விவரமாக அறிய விரும்புகிறேன். தயைகூர்ந்து விளக்கியருளுங்கள்.”

எம தூதர்களுக்கு எமராஜர் வழங்கிய அறிவுரை

விஷ்ணு தூதர்களால் தோற்கடிக்கப்பட்ட எம தூதர்கள், ஸம்யமனீ புரியின் தலைவரும் தங்களின் எஜமானருமான எமராஜரிடம் சென்று, நிகழ்ந்ததை எடுத்துரைத்து சில வினாக்களை எழுப்பினர்: “எஜமானரே! அஜாமிளன் ‘நாராயண’ என அழைத்ததும், ‘பயப்படாதே’ எனக் கூறியபடி, அங்கே வந்து அவனை விடுவித்த அந்த நான்கு அழகிய நபர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம். அஃது உகந்ததாக இருக்குமெனில், தயவுசெய்து கூறுங்கள்.

ஹரி நாமத்தின் மகிமை

அஜாமிளனின் குற்றத்தை விளக்கிக் கூறிய எம தூதர்களிடம் விஷ்ணு தூதர்கள் பின்வருமாறு கூறினர்: “பொதுவாக பாமர மக்கள் எது தர்மம், எது அதர்மம் என்பதை அறியாதவர்களாக உள்ளனர். பொதுமக்கள் சமூகத்திலுள்ள தலைவனின் உதாரணத்தைப் பின்பற்றி நடப்பர். எனவே, தலைவனின் நடத்தை மிகவும் பொறுப்புமிக்கதாகும். “ஒரு தலைவன் இரக்க மனம் உடையவனாக, மக்களின் நம்பிக்கைக்குத் தகுதியானவனாக இருக்க வேண்டும். வாழ்வின் இறுதிக் குறிக்கோள் தன்னுணர்வைப் பெற்று—முழுமுதற் கடவுளுடனான தனது நித்திய உறவை அறிந்து—அதனை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, அவரது நித்திய உலகைச் சென்றடைவதாகும். எனவே, தலைவனானவன் இந்த உண்மையான இலட்சியத்தை அடைவதற்கு மக்களுக்கு வழிகாட்டுபவனாக இருக்க வேண்டும்.”

Latest news

- Advertisement -spot_img