மன்னராக இருந்த பரதர் அனைத்தையும் துறந்து காட்டிற்குச் சென்று பகவத் பக்தியில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு மானின் மீதான பற்றுதலினால் தமது நிலையிலிருந்து வீழ்ச்சியுற்று ஒரு மானாகப் பிறந்தார்.
விதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் ஒரே மகளான ருக்மிணி பேரழகு வாய்ந்தவள். நாரதரிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் ஐஸ்வர்யங்களையும் கேட்டறிந்த ருக்மிணி தன்னை அவரது பாத கமலங்களில் அர்ப்பணித்தாள், அவரது மனைவியாகி அவருக்கு சேவை செய்ய விருப்பம் கொண்டாள்.
தம்மைப் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். பிருது மன்னர் தங்களிடம் புன்னகையோடு உரையாடியதை எண்ணி மகிழ்ந்தனர். சூதர்கள், மாகதர்கள் போன்ற இசைக் கலைஞர்கள் முனிவர்களின் அறிவுரைப்படி அவரைத் தொடர்ந்து புகழ்ந்தனர்.
மைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர் உன்மத்தனாகவே அமைச்சர்கள் எண்ணினர். அதனால், அவரது இளைய சகோதரனான வத்ஸரனை மன்னராக முடிசூட்டினர். வத்ஸரனின் ஆறு மகன்களில் மூத்தவரான புஷ்பாரனனுக்கு ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் இளையவனான வியுஷ்டனுக்கு ஸர்வதேஜன் என்ற மகன் பிறந்தான். ஸர்வதேஜனின் மகனான சாக்ஷுஷன் ஆறாவது மனுவாவார்.
யுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கடலால் தாம் சூழப்பட்டதைப் போன்றும் பயங்கரமான ஓசையையும், நாலா திக்குகளிலிருந்தும் தம்மை நோக்கி விரைந்து வரும் புழுதிப் புயலையும் துருவ மஹாராஜர் கண்டார். கணப்பொழுதில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, அம்மழையில் இரத்தமும் சளியும் சீழும் எலும்பும் மலமூத்திரமும் தலையற்ற முண்டங்களும் அவர்முன் விழுந்தன.