பகவான் வராஹரின் அவதாரத்தினை மாமுனிவரான மைத்ரேயரிடமிருந்து கேட்ட பின்னர் விதுரர் கூப்பிய கரங்களுடன் பகவானின் உன்னத செயல்களை மேலும் கூறியருளும்படி வேண்டினார். குறிப்பாக, பூமியைக் கடலிலிருந்து தூக்கி வந்து அற்புத திருவிளையாடல் புரிந்த பகவான் வராஹருக்கும் அசுர மன்னனான ஹிரண்யாக்ஷனுக்கும் நடந்த போருக்கான காரணத்தை விளக்கும்படி வேண்டினார்.
ஜீவன்கள், தங்களது உண்மையான அடையாளத்தை மறந்தாலொழிய அவர்களால் இந்த ஜடவுலகில் வாழ முடியாது. ஆகவே, பிரம்மா முதலில் ஒருவரது உண்மை அடையாளத்தைப் பற்றிய மறதி அல்லது தேக அபிமானம், மரண உணர்ச்சி, சுய வஞ்சனை, விரக்தி, பொய்யான உரிமை உணர்வு ஆகியவற்றை படைத்ததன் மூலமாக, உயிர்கள் இந்த பௌதிக உலகில் வாழ்வதற்குத் தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கினார்.இவை போன்ற ஐவகை அஞ்ஞானங்களைப் படைத்ததால் பிரம்மா மகிழ்ச்சியடையவில்லை.
அவரை வலம் வந்து வணங்கிய உத்தவர், அவரை விட்டு பிரிய மனமின்றி மிகுந்த துயரத்துடன் விதுரர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் விதுரரிடம் கூறினார்: "அன்பிற்குரிய விதுரரே, அவரது தரிசனத்தால் கிடைக்கும் ஆனந்தத்தைப் பெற முடியாமல் இப்பொழுது நான் பித்தனைப் போல் ஆகியிருக்கிறேன். அவரது உபதேசத்தின்படி நான் பத்ரிகாஷ்ரமத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அங்கே அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக நர-நாராயண ரிஷிக்கள் புராதன காலத்திலிருந்து கடும் தவங்களை மேற்கொண்டு வருகின்றனர்."
விதுரர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சிந்தனையில் தியானித்தவாறு, அயோத்தி, துவாரகை, மதுரா போன்ற இடங்களுக்கு பிரயாணம் செய்தார். இந்த புனித பயணத்தில் பகவானை திருப்தி செய்வதை மட்டுமே தன் முக்கிய குறிக்கோளாக அவர் கொண்டிருந்தார். உணவு, உடை, உறக்கத்தை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல் துறவிபோல் இருந்தார். இவ்வாறாக பாரத கண்டம் முழுவதும் பயணம் செய்த அவர், இறுதியாக பிரபாஸ க்ஷேத்திரத்தை அடைந்தார். தம் உறவினர்களில் பெரும்பாலானோர் மறைந்துவிட்ட செய்தியை அவர் அங்கு அறிந்தார்.
மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு வயதே நிரம்பியவராக இருந்தார். அவரது பாதங்கள், கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி, மற்றும் உடலின் எல்லா பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும், மூக்கு எடுப்பாகவும், கழுத்து சங்கு போலவும், முகம் மிகவும் கவர்ச்சியாகவும் விளங்கியது.