- Advertisement -spot_img

TAG

tamilan

தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமியின் நினைவுகள்

தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமி அவர்கள் மலேசியாவில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்த காலத்தில், இஸ்கான் பக்தர்களுடன் தொடர்பு ஏற்பட்டு 1971ஆம் ஆண்டில் பர்மிங்ஹம் கோயிலில் பிரம்மசாரியாக இணைந்தார். அதன் பிறகு, 1972இல் இலண்டனின் பரி ப்லேஸ் என்ற இடத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு மாறி அங்கே பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். கடின சேவைகளை எளிதில் நிறைவேற்றும் பக்குவமான பிரம்மசாரியாக அவர் திகழ்ந்தார். 1972ஆம் ஆண்டின் ஜுலை மாதத்தில் இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரிடமிருந்து தீக்ஷை பெற்றார். ஸ்ரீல பிரபுபாதர் இவருக்கு விரஜேந்திர குமார தாஸ் என்று பெயரிட்டார்.

கீதையுடன் திருக்குறளை ஒப்பிடலாமா?

திருக்குறள் முழுவதும் வர்ணாஷ்ரம நெறிகள், குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான கடமைகள், கர்ம விதிகள், மறுபிறவி, மறுவுலகம், ஸ்வர்கம், நரகம், மோக்ஷம், பஞ்ச-மகா யாகங்கள், பித்ரு கர்மங்கள் முதலிய பல்வேறு விஷயங்கள் காணக்கிடக்கின்றன. இவை நிச்சயம் வேத புராணங்களின் தாக்கமே. ஸ்வர்க வாழ்வைக் காட்டிலும் வீடுபேறு உயர்ந்தது, அது மாற்றமில்லா வாழ்க்கை, ஆசையை ஒழித்தவரால் அதனை அடைய முடியும் போன்ற கூற்றுகளும் குறள்களில் ஒலிக்கின்றன.

இராமானுஜரின் வழியில் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபடும் இஸ்கான்

கலைஞர் தொலைக்காட்சியில் இராமானுஜரைப் பற்றிய நாடகம் சிறப்பாக ஒளிபரப்பப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். அக்டோபர் 5, 2016 அன்று இஸ்கான் இயக்கத்தின் மூத்த சந்நியாசிகளில் ஒருவரான தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள், தமிழக முன்னாள் முதல்வர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்களைச் சந்தித்து இராமானுஜரையும் வைஷ்ணவ சித்தாந்தத்தையும் பரப்பும் இந்த நாடகத்திற்காக நன்றி தெரிவித்தார். வைஷ்ணவ தர்மத்தின் உலகளாவிய சகோதரத்துவம், இராமானுஜரின் பெருமைகளை உலகெங்கிலும் எடுத்துரைப்பதில் ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் இஸ்கானின் முக்கிய பங்கு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.

பாத யாத்திரை

கிருஷ்ண பக்தியையும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தையும் உலகின் ஒவ்வொரு கிராமங் களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு செல்வதற்கான அருமையான ஏற்பாடு, இஸ்கானின் அகில இந்திய பாத யாத்திரைக் குழு. அழகிய மாடுகள் பூட்டிய ரதத்தில்...

ஆரிய திராவிட பாகுபாடு

இனவாதமா? பிரிவினைவாதமா? வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் தமிழகத்தின் சமீப கால வரலாற்றில், பண்பாடு, சமயம், அரசியல் ஆகியவற்றில் பெரும் மாற்றத்திற்கு காரணமாக இருந்தது ஆரிய திராவிட இனவாதமாகும். அம்மாற்றம் ஆன்மீகத்தையும் அசைத்துப் பார்த்ததால், ஆன்மீகத்தை...

Latest news

- Advertisement -spot_img