இன்றைய இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபுர் மாவட்டத்தில் அமைந்திருப்பதே கோபி வல்லபபுர் என்னும் திருத்தலம். வெளியுலக மக்களுக்கு பரவலாக அறியப்படாதபோதிலும், கௌடீய வைஷ்ணவர்களுக்கு மத்தியில் கோபி வல்லபபுர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாகும். கரக்புரிலிருந்து சுமார்200 கி.மீ. தொலைவில், ஒடிசா மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தை வைஷ்ணவர்கள் "குப்த விருந்தாவனம்" என்றும் அழைப்பதுண்டு.
நாசிக் என்னும் பெயரானது நாஸிக என்னும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது, நாஸிக என்றால் "மூக்கு" என்று பொருள். இங்குதான் லக்ஷ்மணர் இராவணனின் தங்கையான சூர்பனகையின் மூக்கை அறுத்தார்.
பகவான் ஸ்ரீ கௌராங்கர் (சைதன்ய மஹாபிரபு) விஜயம் செய்து தமது லீலைகளை அரங்கேற்றிய இடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுவுடன் அழைத்துச் செல்லும் பகவத் தரிசன யாத்திரை சேவாதாரிகளுக்கு எனது முதற்கண் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அயோத்தியாவாசிகள் இன்றும் ஸ்ரீ இராமரின் நினைவில் வாழ்கின்றனர். எங்கு சென்றாலும், இராம நாமம் தெளிவாக ஒலிக்கின்றது. அயோத்தியாவில் தங்கும் அனைவரும் இராமாயணம் நமக்கு வழங்கியிருக்கும் நல்ல அறிவுரைகளையும் பக்தி மார்க்கத்தையும் நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது.