கிருஷ்ணர் நந்த மஹாராஜருடனும் அன்னை யசோதையுடனும் கோகுலத்தில் வளர்ந்து வந்த சமயத்தில், கம்சன் அவரைக் கொல்வதற்காக பூதனை, சகடாசூரன், திருணாவர்தன் முதலிய பல அசுரர்களை அனுப்பினான். கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் வதம் செய்தபோதிலும், பிள்ளைப் பாசத்தில் மூழ்கியிருந்த நந்த மஹாராஜர் அசுரர்களின் தொடர் தொல்லைகளால் கலக்கமுற்று, கிருஷ்ணரின் பாதுகாப்பைக் கருதி கோகுலத்திலிருந்து இடம்பெயர்ந்து, சாட்டிகரா, திக், காம்யவனம் ஆகிய இடங்களில் சில காலம் வசித்தார். காம்யவனத்திலும் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே நந்த மஹாராஜர் தமது பரிவாரங்களுடன் நந்த கிராமத்திற்குக் குடிபெயர்ந்தார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது அவரது நித்திய சகாக்களும் அவருடன் இணைந்து தோன்றினர். அவர்களுள் இராமானந்த ராயர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய பக்தராகத் திகழ்ந்தார். அவர் ஒடிஸாவில் பவானந்த ராயருடைய ஐந்து மகன்களில் ஒருவராகத் தோன்றினார். இராகவேந்திர புரியின் சீடராகக் கருதப்படும் இவர் இயற்கையாகவே ஒரு தூய பக்தராக இருந்தார். முன்பு வித்யா நகரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய ராஜமுந்திரி மாகாணத்தின் ஆளுநராக பிருதாபருத்ர மன்னரின் கீழ் அவர் பணியாற்றி வந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற பிறகே இராமானந்த ராயர் மஹாபிரபுவின் லீலைகளினுள் வருகிறார்.
எம்பெருமானே, இழிந்த குலத்தில் பிறந்தவன், உமது திருநாமத்தை ஒருமுறை உச்சரிப்பதால் வேள்விகளை இயற்றும் தகுதியுடையவனாகிறான் எனும்போது தங்களை தரிசித்தவரின் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? நாயை உண்ணும் இழிகுலத்தில் பிறந்தவனாயினும் தங்களது திருநாமத்தை உச்சரிப்பவன் வழிபாட்டிற்குரிய வனாவான். அவன் புனித யாகங்கள், தவங்கள், தீர்த்த யாத்திரை, வேதங்கள் பயிலுதல் ஆகியவற்றை ஏற்கனவே நிறைவேற்றியிருக்க வேண்டும்.
வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்
இந்திய தலைநகரான டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்திருப்பதே குருக்ஷேத்திரம் என்னும் திருத்தலம். பகவத் கீதையின் பிறப்பிடமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீ...
இன்றைய இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபுர் மாவட்டத்தில் அமைந்திருப்பதே கோபி வல்லபபுர் என்னும் திருத்தலம். வெளியுலக மக்களுக்கு பரவலாக அறியப்படாதபோதிலும், கௌடீய வைஷ்ணவர்களுக்கு மத்தியில் கோபி வல்லபபுர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாகும். கரக்புரிலிருந்து சுமார்200 கி.மீ. தொலைவில், ஒடிசா மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தை வைஷ்ணவர்கள் "குப்த விருந்தாவனம்" என்றும் அழைப்பதுண்டு.