இராமகேலி என்னும் பெயரை இந்த ஊர் பெற்றதற்கு பகவான் இராமரின் வருகை காரணமாகிறது. இராமசந்திரரின் பத்தினியான சீதா தேவியின் ஏரியை வந்தடைந்தோம், இங்கே அவள் தனது தாயிற்கு பிண்டம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள மரமானது ஐயாயிரம் வருடங்கள் பழமையானதாகக் கூறப்படுகிறது. வருடத்தில் ஒருமுறை பீகாரிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து பிண்டம் கொடுக்கின்றனர். பாலபிக்ஷா என்று அறியப்படும் மரத்தினை வழிபடுகின்றனர். இது நிச்சயமாக நான் பார்த்த மரங்களிலேயே மிகப்பெரியதாகத் தோன்றுகிறது, இதன் மாபெரும் கிளைகள் பூமிவரை இறங்கியுள்ளன.
இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில், மதுராவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அழகான மலையாக அமைந்திருப்பதே கோவர்தனம் என்னும் திருத்தலம். ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திலிருந்து தோன்றிய கோவர்தன மலையானது விருந்தாவனத்தின் மணிமகுடம் என்றும் அறியப்படுகிறது.
மஹாபாரதம், இராமாயணம், பத்ம புராணம், மற்றும் இதர வேத இலக்கியங்களிலும் புஷ்கரின் பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. “புஷ்கரம், மதுரா, துவாரகை போன்ற ஸ்தலங்களில் உபவாசமிருந்து, மனதைக் கட்டுபடுத்தி இந்த இலக்கியங்களை ஆராய்ந்தறிபவன் எல்லா பயத்திலிருந்தும் விடுபடுவான்,” என்று ஸ்ரீமத் பாகவதம் (12.12.61) கூறுகிறது.
மஞ்சள் மற்றும் இதர நிற உடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விட்டலர் வைஜெயந்தி மாலையையும் துளசியையும் கழுத்தில் அணிந்து தரிசனமளிக்கின்றார். வலது கரத்தில் தாமரையும் இடது கரத்தில் சங்கும் வைத்துள்ளார். அவரது மார்பில் பிருகு முனிவரின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அவரது காதுகள் மகர குண்டலத்தினாலும் நெற்றி திலகத்தினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மிக அருகில் செல்லும் யாத்திரிகர்கள் அவரது புன்சிரிப்பினால் கவரப்பட்டு அதனை வாழ்வின் பக்குவமாக கருதுகின்றனர்.