இதுவே வைஷ்ணவம்!!

Must read

—துர்ய தாஸரின் பேட்டியிலிருந்து

ரத யாத்திரை திருவிழாவின் வெற்றியை எண்ணி ஸ்ரீல பிரபுபாதர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் அம்மகிழ்ச்சியை அனைவரிடமும் இடைவிடாமல் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் வினவினார், “நாம் எதற்காக இவ்வெல்லா ஏற்பாடுகளையும் செய்கிறோம்? நம்முடைய எல்லா சக்தியையும் இத்திருவிழாவினை நடத்துவதற்காக ஏன் செலவிடுகிறோம்?” அதுவே வைஷ்ணவரின் கருணை என்று கூறி, அக்கருணையினைப் பற்றி பேசத் தொடங்கினார்.

மற்றவர்களுக்கு நன்மையளிப்பதற்காக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிரச்சாரப் பணிக்காக, வைஷ்ணவன் எந்த சிரமத்தையும் ஏற்கின்றான். இதுவே வைஷ்ணவம், இதுவே வைஷ்ணவம்.” இவ்வாறு இரண்டு முறை கூறிய பின்னர், அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வரத் தொடங்கியது, அவரால் அதன் பின்னர் பேச முடியவில்லை. ரத யாத்திரையின் வெற்றியை நினைத்தபடி, “இதுவே வைஷ்ணவம்,” என்றார்.

அதற்குமேல் அவரால் எதுவும் பேச முடியவில்லை, அனைவரும் புறப்படுங்கள் என்ற பொருளில் அவர் சைகை காட்டினார். அப்போது, நான் விரைவில் பிரச்சாரப் பணிக்காக ஹவாய் செல்லவிருந்தேன். எனவே, அனைவரும் செல்லும் வரை காத்திருந்து, அதன் பின்னர் பிரபுபாதருக்கு நமஸ்காரம் செலுத்தினேன். என்னைப் பார்த்த பிரபுபாதர் தமது சேவகரிடம் சைகை செய்து, அவரது விக்ரஹத்திலிருந்து எனக்கு ஒரு மாலையை வரவழைத்தார். அதனை என் கழுத்தில் அவர் அணிவித்தபோது, ஸ்ரீல பிரபுபாதரின் எல்லையற்ற கருணையை உணர்ந்தேன்.

பிரச்சாரம் செய்து கருணையை வழங்குவதே வைஷ்ணவம் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் நன்கு வெளிப்படுத்தினார்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!  மூலம்: Following Srila Prabhupada – Remembrances by Yadubara Dasa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives