அண்மையில், ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு சேவை செய்யும் ஒருவர் ஒரு “பெரிய” வேலைக்குத் தேர்ச்சி பெற்றுள்ளதைப் பாராட்டி பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. தன்னுடைய பணி நேரம் தவிர்த்து மீதமிருக்கும் நேரத்தில் பெருமாள் சேவையைத் தொடருவேன் என்று அவர் கூறியிருந்தார். எந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்பது தனிநபர் உரிமை. ஒவ்வொருவருடைய குடும்ப சூழ்நிலை, சமுதாய நிலை என பல காரணங்களால் இத்தகு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஆயினும், இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
லௌகீகவாதம் பெருகிவரும் தற்போதைய தருணத்தில், பெரும்பாலானோர் பகவத் காரியத்தைக் காட்டிலும் உலகப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர், பணத்தை மையமாக வைத்தே வாழ்கின்றனர். தர்ம காரியத்தை விட்டு முற்றிலுமாக விலகி, மிலேச்சர்கள் எனப்படும் வெள்ளைக்காரர்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரிக்கிறது. நம்முடைய இஸ்கான் பக்தர்களில் சிலர்கூட, தங்களது பிள்ளைகளை பகவத் கைங்கரியத்தில் ஈடுபடுத்த மறுக்கின்றனர்; பிள்ளைகள் கோயிலில் கைங்கரியம் செய்வதைவிட வேறு “பெரிய” வேலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர்.
பகவத் கைங்கரியம் செய்வதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் எந்த வேலை பெரியது என்பதில் மக்களிடையே புரிந்துணர்வு இல்லை. பல்வேறு பகவத் கைங்கரியத்திற்கு முன்பாக, இதர எல்லா வேலைகளும் அற்பமானவை. அரசாங்க வேலையில் நிரந்தர சம்பளம் வாங்குபவர், தனியார் வேலையில் இலட்சக்கணக்கில் சம்பாதிப்பவர், கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் தொழிலதிபர், பிரபல நடிகர்கள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர்கள், உயரதிகாரிகள் என பலரை நாம் “வாழ்வில் வெற்றி பெற்றவர்கள்” என்றும், “பெரிய வேலை செய்பவர்கள்” என்றும் நினைக்கின்றோம்.
ஆயினும், இவ்வெல்லா வேலையைக் காட்டிலும், பகவான் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபட்டிருப்பவரே மிகப்பெரியவர், அவரது வேலையே மிகப்பெரிய வேலை. வெளியே பார்ப்பதற்கு அவர் எளிமையாக இருக்கலாம், காசு பணம் இல்லாதவராக இருக்கலாம்; ஆனால் உலகத்திற்கே அதிபதியான கிருஷ்ணரின்பால் அவர் அன்பு கொண்டுள்ளார், அவருக்கு சேவை செய்கிறார்.
எனவே, மேலே கூறப்பட்ட “பெரிய” வேலைகளைக் கைவிட்டு, பகவானுடைய திருப்பணிக்காக வாழ்வை அர்ப்பணிப்பவரே மிகவுயர்ந்தவர், அவரே நமது போற்றுதலுக்கு உரியவர்; அந்த “பெரிய” வேலைக்காக பகவத் கைங்கரியத்தைக் கைவிடுபவர் அல்லர். பணம், புகழ், அதிகாரம் முதலியவற்றை வைத்து “பெரிய வேலை” “சிறிய வேலை” என்று தீர்மானிக்கக் கூடாது.
jk602a
I adore the way your distinctive personality shines through in your words. It seems as if we’re having a meaningful conversation.
Your post provides a lot of valuable information. I found it very beneficial. Thank you for writing such a detailed post.