சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள்

2016-12-08T15:53:16+00:00December, 2013|சமுதாய பார்வை, ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள் பின்வரும் உரையாடலில், நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு இயற்கையைச் சார்ந்த சமுதாயத்தை அமைப்பதே தீர்வு என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களிடையே விளக்குகிறார். ஸ்ரீல பிரபுபாதர்: இக்காலத்திலுள்ள அரசியல்வாதிகள் ஏழை மக்களை தங்களது சுயநலனிற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் மக்கள் துன்பப்படுகிறார்கள். ஒருபுறம் போதிய மழை இல்லாததால் உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படுகிறது, மறுபுறம் அரசாங்கத்தினால் அதிக அளவில் வரிகள் விதிக்கப்படுகின்றன. இத்தகைய துன்பங்களை மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும்போது, அவர்கள் காலப்போக்கில் வீட்டை [...]

நவீன சமுதாயத்தின் குறைபாடுகளும் தீர்வும்

2017-01-11T11:40:08+00:00July, 2013|சமுதாய பார்வை, பொது|

நாம் வாழும் பாரத நாட்டில், அதன் இயல்பான பாரம்பரியத்தை அதாவது ஆன்மீக கலாசாரத்தை விட்டு நாம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாசாரத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக நம்மை அடிமைப்படுத்த தொடங்கினர். பாரதத்தின் ஆன்மீக கலாசாரத்தை தகர்த்தால் மட்டுமே இப்பூமியின் மக்களை அடிமைப்படுத்துவது சாத்தியம் என்று கருதினர். சிறிது சிறிதாக அவர்களுடைய கல்வி மற்றும் கலாசாரத்தை நம்மீது தினித்தனர். வேறு வழியின்றி பாரத மக்களும் அதனைக் கடைபிடிக்க தொடங்கினர். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில், இந்தியா சுதந்திரம் பெற்று ஆங்கிலேயர்கள் இங்கிருந்து சென்றுவிட்டாலும், அவர்கள் கற்றுக் கொடுத்த மேற்கத்திய கலாசாரமும் கல்வி முறையும் மேன்மேலும் வளர்ச்சி பெற்று, உண்மையான வேத கலாசாரத்தை இன்று நாம் ஏறக்குறைய இழந்து நிற்கின்றோம்.

பெட்ரோல் சில கருத்துகள்

2017-02-01T17:04:29+00:00June, 2012|சமுதாய பார்வை, பொது, ஸ்ரீல பிரபுபாதர்|

பெட்ரோல் பிரச்சனை என்னும் மற்றொரு பிரச்சனையை உருவாக்கி யுள்ளனர். நாகரிகம் என்ற பெயரில் இந்த பிரச்சனையை உருவாகியுள்ளது. இந்த மோட்டார் கார்கள் வருவதற்கு முன்பு மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

மின்வெட்டும் நிரந்தர தீர்வும்

2017-01-31T17:44:09+00:00April, 2012|சமுதாய பார்வை, பொது|

மரணத்திற்குப் பின் கிருஷ்ண லோகம் செல்வோம்; இருப்பினும், தற்போதைய வாழ்வில் மின்சாரம் இல்லையேல் மகிழ்ச்சி இல்லையே என்று சிலர் எண்ணலாம். உண்மை என்னவெனில், கிருஷ்ண பக்தியின் வழிமுறை மிகவும் ஆனந்தமயமானது.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைப்போம்

2017-01-31T13:05:07+00:00March, 2012|சமுதாய பார்வை, பொது|

பக்தர்கள் செய்யும் சிறிதளவு பக்தியையும் பகவான் நினைவு கொள்பவர். அவர் கருணை மிக்கவர் என்பதால், நினைவுகொள்ளுங்கள் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இறக்கும் தருவாயில் பக்தன் மறந்தாலும் கிருஷ்ணர் அவனுக்கு நினைவுபடுத்தி விடுவார்.

ரஷ்ய பகவத் கீதை வழக்கும் விளக்கமும்

2017-01-27T16:19:07+00:00February, 2012|சமுதாய பார்வை, பொது|

சமீபத்திய வருடங்களில் ரஷ்ய மக்களில் பலர் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் (இஸ்கானில்) இணைந்து பக்தர்களாக மாறி வருகின்றனர். இத்தகைய மாற்றங்களுக்கு ஸ்ரீல பிரபுபாதரின் பகவத் கீதை உண்மையுருவில் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனைச் சகித்துக்கொள்ள இயலாத சில அமைப்பினர், பகவத் கீதை உண்மையுருவில் புத்தகத்தினை வன்முறையைப் பரப்பும் புத்தகமாக அறிவித்து தடை செய்ய வேண்டுமென்று ரஷ்யாவின் டோம்ஸ்க் மாகாணத்தின் நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்கு தொடர்ந்தனர்.

உண்ணாவிரதம் உண்மையும் போலியும்

2017-01-16T14:38:14+00:00November, 2011|சமுதாய பார்வை, பொது|

ஆன்மீக நன்மைக்காக உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் அதற்கான பலனை நிச்சயம் அடைவர். பௌதிக நன்மைக்காக உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் பெரும் பாலான நேரங்களில் விரும்பிய பலனை அடைவதற்கு முன்பே தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம். அவர்களது உண்ணாவிரதங்கள் புகழைக் கொடுக்கலாம், பிரச்சனைக்கான தீர்வைக் கொடுப்பதில்லை.

பாரதப் பண்பாட்டில் பெண்களின் பங்கு

2017-01-16T13:30:31+00:00November, 2011|சமுதாய பார்வை, பொது|

பாரம்பரியக் கொள்கைகள் அனைத்தும் பாழாகி வரும் இத்தருணத்தில், பெண்களுடைய கடமைகள் குறித்து யாரும் பேசுவதில்லை, யாரும் கேட்பதில்லை, யாரும் நினைத்துப் பார்ப்பதும் இல்லை. “பெண் விடுதலை,” “பெண் உரிமை,” “பெண் புரட்சி,” “பெண் கல்வி” என பல்வேறு விஷயங்கள் சமுதாயத்தில் நிறைந்துள்ளன. இவையனைத்தும் உண்மையில் பெண்மைக்கு நன்மை செய்துள்ளனவா என்றால், சற்று யோசிக்கக்கூடியவர்களின் பதில் நிச்சயம் “இல்லை” என்பதே.

தீவிரவாதச் செயல்கள்

2016-12-26T12:25:18+00:00August, 2011|சமுதாய பார்வை, பொது|

தீவிரவாதம் மோசமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், அந்த தீவிரவாதத்தை ஒரு நாடே முன்னின்று அரங்கேற்றும்போது, அத்தகு தீவிரவாதம் மற்றெல்லாவற்றையும்விட மிகவும் மோசமானது என்று அமெரிக்கா கருதுகிறது. அதன்படி, பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று இந்தியாவும், ஈரான் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றது என்று அமெரிக்காவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதைப் பார்க்கிறோம். தீவிரவாதம் என்று சொல்லும்போது, நம் மனதில் வருவது மனிதர்களைக் கொல்வது மட்டுமே. மனிதர்களைக் கொல்வது தீவிரவாதமே, ஆனால் கோடிக்கணக்கான மிருகங்களும் பறவைகளும் தினமும் கசாப்புக் கூடங்களில் கொல்லப்படுகின்றனவே, அவற்றிற்கு என்ன பதில்? அதுவும் தீவிரவாதச் செயலாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

நவீன கல்வியின் குறைபாடுகள் யாவை?

2016-12-26T15:52:55+00:00July, 2011|சமுதாய பார்வை, பொது|

நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும் கற்றுக் கொடுக்கும் கல்வியே சிறந்த கல்வி வழங்கியவர்:  திரு. சைதன்ய சரண தாஸ் “கட்டுப்படும் இயந்திரங்களும் கட்டுப்படாத மனிதர்களும் நம்மிடம் உள்ளன" என்னும் இந்த புதுமொழி தொழில்நுட்பத்தை தவறாக உபயோகிப்பதால் உலகின் பல பகுதிகளிலும் விளையும் பேரழிவின் அபாயத்தை நமக்கு அறிவிக்கின்றன. நவீன சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையைக் கிண்டலான விதத்தில் இப்புதுமொழி கூறுகின்றது. “உலகம் உங்கள் விரல் நுனியில்" என்று சில விளம்பரங்கள் சொல்லும் [...]