தேவர்களை வழிபடலாமா?

2016-12-10T15:32:28+00:00August, 2016|தத்துவம்|

கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்பர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தெய்வீக வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. பக்திக்கு பெயர் போன திராவிட தேசத்தில் இன்றும் ஏராளமான வழிப்பாட்டு தலங்கள், கோயில்கள், குளங்கள் காணப்படுகின்றன, இறைவனை வழிபடும் கலாச்சாரம் தமிழ் மக்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாகும். அதே சமயத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே மனிதர்கள் மனிதர்களையே வழிபடும் அவலநிலை கலாச்சாரம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பெருகியுள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல.

எத்தனையோ ஆன்மீக இயக்கங்கள் இருக்க “ஏன் இஸ்கான்?”

2016-12-09T19:10:42+00:00July, 2016|தத்துவம்|

ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, பணம், நாடு, கல்வி என எந்த பேதமும் இன்றி, அனைத்து மக்களையும் இஸ்கான் வரவேற்கின்றது. ஆன்மீக வாழ்வில் உண்மையாகவும் தீவிரமாகவும் இருப்பவர்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினைச் சோதித்துப் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள், நிச்சயமாக வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை அடைவீர்கள். முன்வாருங்கள், உங்களுடைய வாழ்வை கிருஷ்ணருக்கு அர்ப்பணிப்பதைப் பற்றி வினவுங்கள்.

சரணாகதி பாடல்

2016-10-28T00:42:58+00:00July, 2016|தத்துவம்|

(1) மானஸ, தேஹ, கேஹ, ஜோ கிசு மோர அர்பிலூ துவா பதே, நந்த-கிஷோர! நந்த கிஷோர! (இளமையுடன் விளங்கும் நந்தரின் மகனே) மனம், உடல், குடும்பம் என என்னவெல்லாம் என்னிடம் உள்ளதோ, அவற்றை உமது பாதங்களில் நான் அர்ப்பணம் செய்கிறேன்.

கல்லின் சுமையை இறக்கி வைக்கலாமே?

2016-10-28T00:42:59+00:00June, 2016|தத்துவம்|

இன்றைய சமுதாயத்தில் நாம் நம்முடைய பிரச்சனைக்கான காரணம் தெரியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய பிரச்சனை என்ன என்பதும் அதற்கான தீர்வும் இங்கே ஒரு கதையின் வடிவில் விளக்கப்படுகிறது. கதையினை கவனமாகப் படியுங்கள்.

ஆன்மீக குருவிற்கான பரிசோதனை (பாகம் இரண்டு)

2016-10-28T00:43:00+00:00June, 2016|குரு, தத்துவம்|

ஆன்மீக குரு என்பவர் இதயத்திலுள்ள கவலை என்னும் காட்டுத்தீயினை அணைக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்றும் அதுவே குருவிற்கான முதல் பரிசோதனை என்றும் சென்ற இதழில் கண்டோம். இதர பரிசோதனைகளை இங்கு காணலாம்.

மரணமும் மறுபிறவியும்

2016-10-28T00:43:02+00:00April, 2016|தத்துவம், மறுபிறவி, ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

கனவான்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸங்கீர்த்தன இயக்கம் வேத சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதும் மிகுந்த அங்கீகாரம் பெற்றதுமாகும். உங்களில் பெரும்பாலானோர் பகவத் கீதையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், "பற்பல பிறவிகளுக்குப் பிறகு, புத்திசாலி மனிதன் என்னிடம் சரணடைகின்றான், வாஸுதேவனான நானே எல்லாம் என்பதை உணர்கிறான்."

பகவான் சைதன்யர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்

2018-07-26T11:40:32+00:00March, 2016|தத்துவம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|

பரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த கட்டாயத்திற்கும் அவர் உட்பட்டவரல்ல என்றபோதிலும், அவரைப் பற்றிய அறிவை இழந்து இப்பௌதிக உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தாழ்ந்த கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக

பஞ்ச-தத்துவ வழிபாடு

2016-10-28T00:43:02+00:00March, 2016|தத்துவம்|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்புவார் என்றும் அவரை அவருடைய சகாக்களுடன் இணைந்து வழிபடுபவர்கள் புத்திசாலிகள் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) கூறுகிறது. அதன்படி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பின்பற்றும் கௌடீய வைஷ்ணவர்கள், அவரை அவருடைய முக்கிய சகாக்களான ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ அத்வைத பிரபு, ஸ்ரீ கதாதர பண்டிதர், ஸ்ரீவாஸ தாகூர் மற்றும் இதர பக்தர்களுடன் இணைந்து பஞ்ச-தத்துவமாக (ஐந்து தத்துவங்களாக) வழிபடுகின்றனர். இந்த பஞ்ச-தத்துவ வழிபாடு கலி [...]

சங்கம் : பூவோடு மணக்கும் நாரா, நாரோடு வாடும் பூவா?

2016-10-28T00:43:11+00:00January, 2016|தத்துவம்|

ஒரு மனிதனை அவனுடைய சேர்க்கையை வைத்து அறியலாம் என்பது உலகெங்கிலும் அறியப்படும் பழமொழியாகும். "இனம் இனத்தோடு சேரும்," "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என பல விதங்களில் சகவாசத்தின் தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. நாம் மேற்கொள்ளும் சகவாசம் நம்முடைய ஆன்மீக வாழ்வில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. அந்த சங்கம் குறித்த சிறு அலசல் இதோ, இங்கே.

சாஸ்திரங்கள் இன்றி ஆன்மீக உணர்வுகளா?

2016-10-28T00:43:13+00:00October, 2015|ஞான வாள், தத்துவம்|

சில மாதங்களுக்கு முன்னர் எமது கோயிலுக்கு வருகை தந்த நபர் ஒருவர், "நீங்கள் ஏன் பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? தன்னுணர்வு, இறையுணர்வு என்பவை தானாக உணர்வதுதானே? இதற்கு புத்தகங்கள் தேவையா? புத்தகங்களால் தன்னுணர்வை எவ்வாறு வழங்க இயலும்?" என்று கேள்வி கேட்டார். மேலும், "நாம் நமக்குள்ளே உணர்வதுதான் தன்னுணர்வு" என்று பிரபல சாமியார் ஒருவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அவருக்கு சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை யாம் பக்குவமாக எடுத்துரைக்க அவரும் உண்மையை உணர்ந்தார். அத்தகவல்கள் பகவத் தரிசன வாசகர்களுக்கும் உதவும் என்பதால், இதோ இங்கே இந்தக் கட்டுரை.