கூறியவர்: உமாபதி தாஸ்

1966ல் நியூயார்க் நகரில், இளைஞன் ஒருவன் இந்தியாவின் புகழ்பெற்ற இசையான சிதார் இசை அடங்கிய ஓர் இசைத்தட்டை எடுத்து வந்தான். அதனை இசைக்கத் தொடங்கியவுடனே ஸ்ரீல பிரபுபாதர் புன்னகைத்தார். அந்த இளைஞன், “இந்த இசை உங்களுக்குப் பிடிக்குமா?” என்றான். அதற்கு ஸ்ரீல பிரபுபாதர், “இது புலனின்பத்திற்கான இசை” என்றார்.

“என்ன கூறுகிறீர்? இந்த இசை இந்திய ஆலயங்களில் இசைக்கப்படுகின்றது.”

பிரபுபாதர் மீண்டும் அழுத்தமாகக் கூறினார், “இல்லை, இது புலனின்பத்திற்கான இசைதான், இசைக் கலைஞர்கள் வெறும் வியாபாரிகளாகத்தான் இருக்கின்றனர்.”

“நீங்களும் வியாபாரியாகத்தானே இருந்தீர்கள்.”

இதனைக் கேட்டு பிரபுபாதர் சிரித்தவாறே வினவினார், “ஒரு காலத்தில் நிர்வாணமாக இருந்தேன் என்பதற்காக, அப்படியே இருக்க வேண்டுமா என்ன?”

“அந்த இசைக் கலைஞர் பக்தராக விரும்பினால்? என்று இளைஞன் கேட்க, பிரபுபாதர், “அது மிகவும் அருமை. ஆயினும், இது புலனின்பத்திற்கான இசையே” என்றார்.
ஜய ல பிரபுபாத!!!