செயல்கள் நிரம்பிய யோகமுறை

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

செயல்கள் நிரம்பிய யோகமுறை – ஸ்தாபக ஆச்சாரியரின் உரை  – பக்குவநிலைக்கான வழி புத்தகத்திலிருந்து

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

யோகம் என்றால் அமைதியாக அமர்ந்திருத்தல் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் முற்றிலும் செயல்களால் நிரம்பிய உயர்ந்த யோகமுறையினை ஸ்ரீல பிரபுபாதர் இங்கே விளக்குகிறார்.

பகவத் கீதையின் ஆறாவது மற்றும் எட்டாவது அத்தியாயங்களில் பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக அஷ்டாங்க யோக முறையை விளக்குகிறார். அதே சமயத்தில், இந்த வழிமுறையினைப் பின்பற்றுதல், மக்களுக்கு, அதிலும் குறிப்பாக அறியாமையும் குழப்பமும் நிறைந்த இந்த கலி யுக மக்களுக்கு மிகவும் கடினமானதாகும்.

கிருஷ்ணரின் திருப்திக்காகச் செயல்படுதல்

பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்தில், இந்த அஷ்டாங்க யோக முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றபோதிலும், கிருஷ்ண உணர்வில் செயல்படுவதே சிறந்தது என்று பகவான் வலியுறுத்துகிறார். இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் தமது குடும்பத்தைப் பராமரிப்பதற்காகச் செயல்படுகின்றனர்; ஒவ்வொருவரும் ஏதாவது சுயநலனுக்காக அல்லது சொந்தப் புலன்களின் திருப்திக்காகச் செயல்படுகின்றனர்; அந்த ஆசைகள் குறுகிய நோக்குடன் இருக்கலாம், அல்லது பரந்த நோக்குடன் இருக்கலாம். ஆயினும், செயலின் பலன்களில் பற்றின்றி கிருஷ்ண உணர்வில் செயல்படுவதே பக்குவமான செயல்பாடாகும்.

நம்முடைய ஸ்வரூபத்தின்படி (உண்மை நிலையின்படி) நாம் முழுமுதற் கடவுளுடைய அம்சங்கள் என்பதால், கிருஷ்ண உணர்வில் செயல்படுவது நம்முடைய கடமையாகிறது. உடலின் தனிப்பட்ட அங்கங்கள் அந்த முழு உடலின் திருப்திக்கானவை, சொந்த திருப்திக்கானவை அல்ல. பூரண முழுமையை திருப்தி செய்வதே இலக்காகும். அதைப் போலவே, உயிர்வாழி உன்னத முழுமையான பரம புருஷ பகவானின் திருப்திக்காகவே செயலாற்ற வேண்டும், சொந்த திருப்திக்காகச் செயலாற்றக் கூடாது. இவ்வாறு செய்யக்கூடியவர்கள் பக்குவமான சந்நியாசியாகவும் பக்குவமான யோகியாகவும் விளங்குகின்றனர்.

அவர்கள் கிருஷ்ணரின் திருப்திக்காக கிருஷ்ணருக்குத் தொண்டாற்றுவதிலேயே திருப்தியடைகிறார்கள். அந்தத் தொண்டிற்கு பிரதிபலனாக அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. இதுவே தூய பக்தியின் இயல்பாகும்.

எதையும் எதிர்பார்க்காத பக்தி

இந்த பக்தி மனப்பான்மையை பகவான் சைதன்ய மஹாபிரபு இரத்தின சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்:

ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம்

 கவிதாம் வா ஜகதீஷ காமயே

மம ஜன்மனி ஜன்மனீஷ்வரே

 பவதாத் பக்திர் அஹைதுகீ த்வயி

“எல்லாம் வல்ல பெருமானே, பொருள் வேண்டேன், என்னைப் பின்பற்றுவோரையும் வேண்டேன், அழகிய பெண்களும் வேண்டேன்; நான் வேண்டுவதெல்லாம் ஒவ்வொரு பிறவியிலும் உமக்குக் களங்கமற்ற பக்தித் தொண்டாற்ற வேண்டும் என்பது மட்டுமே.” (சிக்ஷாஷ்டகம் 4) இதுவே பக்தி யோக முறையின் சாரம். தூய பக்தி மனப்பான்மைக்கு பல உதாரணங்கள் உள்ளன.

ஒருமுறை பகவான் நரசிம்மதேவர் பிரகலாத மஹாராஜரிடம் கூறினார், “அன்பிற்குரிய சிறுவனே, எனக்காக நீ எவ்வளவோ துன்பங்களை அனுபவித்திருக்கிறாய். உனக்கு என்ன வேண்டுமோ வேண்டிப் பெற்றுக்கொள்.” தூய பக்தராக இருந்தமையால், பிரகலாத மஹாராஜர் எதையும் வேண்டுவதற்கு மறுத்து விட்டார். அவர் கூறினார், “அன்பிற்குரிய எஜமானரே, நான் தங்களோடு வியாபாரம் செய்பவன் அல்ல. எனது சேவைக்கு எந்த ஊதியமும் பெறுவதற்கு நான் விரும்பவில்லை.” இதுவே தூய பக்தியின் மனப்பாங்கு.

பிரகலாதர் பகவான் நரசிம்மரிடம் தூய பக்தியின் மனப்பான்மையை வெளிப்படுத்தினார்.

சித்திகளை விரும்பும் யோகிகள்

பௌதிக வேதனைகளால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணத்தினால், யோகிகளும் ஞானிகளும் பரம்பொருளுடன் ஒன்றாகி விட விரும்புகிறார்கள். பிரிவுத் துயரில் வேதனைப்படுவதால், அவர்கள் பகவானுடன் ஒன்றாகி விட விரும்புகிறார்கள். இருப்பினும், ஒரு தூய பக்தனின் அனுபவம் இதுவல்ல. அவன் பகவானிடமிருந்து பிரிந்திருந்தாலும், அந்தப் பிரிவிலும் பகவானின் தொண்டை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.

அருவ பிரம்மனுடன் அல்லது கடவுளுடன் ஒன்றாகி விடுவதற்கான விருப்பமானது மற்ற பௌதிக ஆசைகளைக் காட்டிலும் சிறந்தது என்றபோதிலும், இதுவும் சுயநலமற்ற விருப்பம் கிடையாது. அதுபோலவே, எல்லா பௌதிகச் செயல்களையும் நிறுத்திவிட்டு பாதி மூடிய கண்களுடன் யோகப் பயிற்சியில் ஈடுபடும் அஷ்டாங்க யோகியும் தனது சுயநலனிற்கான திருப்தியையே நாடுகிறான். இத்தகைய யோகிகள் பௌதிக சித்திகளைப் பெற விரும்புகின்றனர், சித்திகளே யோகத்தின் பக்குவநிலை என்பது அவர்களுடைய கருத்து. உண்மையில், இஃது ஒரு பௌதிக முறையே தவிர, யோகத்தின் பக்குவநிலை அல்ல.

செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்

இந்த பாரத நாட்டில் பரவலாக இறக்குமதி ஆகிக் கொண்டிருக்கும் பௌதிகவாதத்தினைத் தடுப்பதற்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. நம்முடைய மையங்களிலும் கோயில்களிலும் பண்ணைகளிலும் சேர்ந்து, நம்முடைய போதனைகளை உள்வாங்கி, அதனை மற்றவர்களுக்கும் கற்றுத்தரும்படியான பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் நமக்குத் தேவைப்படுகிறார்கள். மேற்கிலிருந்து வரும் விஷப் பண்பாட்டிலிருந்து நாமும் விடுபட்டு, பாரத நாட்டையும் அந்தப் பெரும் துயரிலிருந்து பாதுகாக்க வேண்டும்!

மேற்கத்திய பண்பாட்டினை இந்திய இளைய சமுதாயத்தின் மீது பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே பல்வேறு சமூகப் பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. அமெரிக்காவில் என்னுடைய பெரும்பாலான பள்ளித் தோழர்கள் பெற்றோர்களே இல்லாமல் அல்லது விவாகரத்து பெற்ற பெற்றோர்களுடன் வளர்ந்தனர்; அவர்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்துகளுக்கு அடிமையாகியிருந்தனர், அல்லது வெறுமனே போதைக்கு அடிமையாகி இலக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இக்காட்சியை நான் அன்றாடம் கண்டுள்ளேன். அவர்களுடைய வாழ்க்கை பாரம்பரிய நெறிமுறைகளுக்கும், குரு, சாஸ்திரம் மற்றும் சாதுக்களின் வார்த்தைகளுக்கும் எதிராக உள்ளது.

சித்திகளின் வகைகள்

யோகப் பயிற்சியின் விதிமுறைகளை ஒருவர் பின்பற்றினால். அவர் எட்டு வகையான சித்திகளை அடைய முடியும். அவரால் பஞ்சைவிட லேசானவராக முடியும், பாறாங்கல்லைவிட கனமானவராக முடியும், எதை விரும்பினாலும் உடனே பெற முடியும். சில வேளைகளில் அவரால் புதிய கிரகத்தைக்கூட படைக்க முடியும். இத்தகு சக்திகளைப் பெற்ற யோகிகள் அரிதானவர்கள் என்றபோதிலும், அவர்கள் இருப்பது உண்மையே. ஒருமுறை விஸ்வாமித்ர யோகி பனை மரத்திலிருந்து மனிதனைப் பெற்றெடுக்க விரும்பினார். “தாயின் கருவில் மனிதன் ஏன் இத்தனை மாதம் தங்க வேண்டும்? ஒரு பழத்தைப் போன்று மனிதனைப் பெற்றெடுக்க முடியாதா?” இவ்வாறு எண்ணிய விஸ்வாமித்ர யோகி மனிதர்களை தேங்காய்களைப் போல் உருவாக்கினார்.

யோகிகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள், அவர்களால் சில சமயங்களில் இவ்வாறு செய்து காட்ட முடியும்; ஆயினும், இவையெல்லாம் பௌதிக சக்திகளே. அந்த பௌதிக சக்திகளை அவர்களால் நீண்ட காலத்திற்குத் தக்கவைக்க முடியாது என்பதால், இறுதியில் இந்த யோகிகள் அழிவுறுகிறார்கள். பக்தி யோகிகளுக்கு இத்தகைய சித்திகளில் நாட்டம் கிடையாது.

முக்தியைக்கூட விரும்பாத பக்தன்

கிருஷ்ண உணர்வில் செயலாற்றும் பக்தி யோகி சுயநலன் ஏதுமின்றி முழுமையின் திருப்திக்காக உழைக்கின்றான். கிருஷ்ண உணர்வில் இருப்பவன் தனது சுய திருப்தியை விரும்புவதில்லை. மாறாக, கிருஷ்ணரின் திருப்தியே அவனுக்கு வெற்றியின் அளவுகோல்; எனவே, அவன் பக்குவமான சந்நியாசியாகவும் பக்குவமான யோகியாகவும் கருதப்படுகிறான்.

தூய பக்தன் முக்தியைக்கூட நாடுவதில்லை. முக்தியை விரும்புவோர் மறுபிறவியிலிருந்து தப்பிக்க வழிதேடுகிறார்கள். சூன்யத்தை நம்புபவர்களும் ஜட வாழ்விற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார்கள். இருப்பினும், சைதன்ய மஹாபிரபுவோ பிறவிதோறும் பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றும் வாய்ப்பை மட்டுமே வேண்டுகிறார்; வேறுவிதமாகக் கூறினால், சைதன்ய மஹாபிரபு மீண்டும்மீண்டும் பிறவியெடுத்து பௌதிகத் துன்பங்களை அனுபவிப்பதற்கும் தயாராக இருந்தார். அப்படியெனில், சைதன்ய மஹாபிரபு என்னதான் விரும்பினார்? அவர் கடவுளின் சேவையில் ஈடுபட மட்டுமே விரும்பினார், வேறு எதையும் விரும்பவில்லை; ஏனெனில், அதுவே யோகத்தின் உண்மையான பக்குவநிலை.

அனைத்தையும் ஆன்மீகமாக்குதல்

இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் முழுமையான கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டு, புலனுகர்ச்சிக்காகச் செயல்படுவதை நிறுத்திவிட்டால், இந்த முழு உலகமும் உடனடியாக ஆன்மீகமாகிவிடும். எனவே, கிருஷ்ணரின் திருப்திக்காக எவ்வாறு செயலாற்றுவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதைப் புரிந்துகொள்ள சிறிது காலம் தேவை. ஏதேனும் ஒன்று கிருஷ்ணரின் திருப்திக்காகப் பயன்படுத்தப்பட்டால், அப்போது அஃது ஆன்மீகமாகிறது.

நாங்கள் ஒலிபெருக்கி, தட்டச்சு முதலிய கருவிகளை கிருஷ்ணரைப் பற்றிப் பேசுவதற்காகவும் கிருஷ்ணரைப் பற்றி எழுதுவதற்காகவும் பயன்படுத்துவதால், அவை ஆன்மீகத் தன்மையைப் பெற்றுள்ளன. பிரசாதத்திற்கும் சாதாரண உணவிற்கும் என்ன வேற்றுமை? “அஃது என்ன பிரசாதம்? நாங்கள் சாதாரண உணவை உண்கிறோம், நீங்கள் அதனை ஏன் பிரசாதம் என்று அழைக்கிறீர்?” என்று சிலர் வினவலாம். இந்த உணவு கிருஷ்ணரின் திருப்திக்காக அர்ப்பணிக்கப்பட்டு ஆன்மீகத் தன்மையைப் பெற்றுள்ளதால், பிரசாதம் என்று அறியப்படுகிறது.

அனைத்தும் கிருஷ்ணருக்கே

ஓவியம் வரைவதன் மூலமாக பகவானுக்கு சேவை செய்யும் பக்தர்

தொண்டாற்றுதல் என்று நாம் கூறும்போது, செயல்களில் ஈடுபடுவதைக் குறிப்பிடுகின்றோம். யாரேனும் ஒருவருக்குத் தொண்டாற்றும்போது, நாம் சில செயல்களில் ஈடுபடுகிறோம். நாம் கிருஷ்ணருக்குத் தொண்டாற்றும்போது, கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்தல், சமைத்தல், கோயிலைத் தூய்மை செய்தல், கிருஷ்ணரைப் பற்றிய புத்தகங்களை விநியோகம் செய்தல், கிருஷ்ணரைப் பற்றி எழுதுதல், கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வதற்காக மளிகைப் பொருட்களை வாங்குதல் முதலிய செயல்களில் ஈடுபடுகிறோம். தொண்டாற்றுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. கிருஷ்ணருக்கு உதவுதல் என்றால் கிருஷ்ணருக்காகச் செயல்படுதல் என்று பொருள்; இஃது ஏதேனும் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு செயற்கையாக தியானம் செய்வது அல்ல. கிருஷ்ண உணர்வு என்றால் அங்கே நிச்சயம் செயல்பாடுகள் உண்டு. நம்மிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் கிருஷ்ணருக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதுவே பக்தி யோகத்தின் வழிமுறையாகும்.

கிருஷ்ணர் நமக்கு மனதை வழங்கியுள்ளார், நாம் இந்த மனதை கிருஷ்ணரைப் பற்றி சிந்திப்பதில் பயன்படுத்த வேண்டும். நமக்கு இந்த கைகள் வழங்கப்பட்டுள்ளன, இவற்றை நாம் கோயிலைத் தூய்மை செய்வதற்காக அல்லது கிருஷ்ணருக்காகச் சமைப்பதில் ஈடுபடுத்த வேண்டும். நமக்கு கால்கள் கொடுக்கப்பட்டுள்ளன, இவற்றை கிருஷ்ணருடைய கோயிலுக்குச் செல்வதற்காகப் பயன்படுத்த வேண்டும். நமக்கு மூக்கு வழங்கப்பட்டுள்ளது, இதனை கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை நுகர்வதற்காகப் பயன்படுத்த வேண்டும். பக்தி யோக வழிமுறையின் மூலமாக இவ்வாறு எல்லா புலன்களையும் நாம் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுத்துகிறோம், இவ்வழியில் புலன்கள் ஆன்மீகமயமாக்கப்படுகின்றன.

அபத்தமான செயல்களை நிறுத்துதல்

பகவத் கீதையில், அர்ஜுனன் செயல்படுவதற்கு மறுப்பு தெரிவித்தான், ஆனால் செயல்களில் ஈடுபடும்படி கிருஷ்ணர் அவனைத் தூண்டினார். மொத்த பகவத் கீதையும் செயல்படுவதற்கான தூண்டுதலே, கிருஷ்ணரின் சார்பாக கிருஷ்ண உணர்வில் செயல்படுவதற்கான தூண்டுதலே. “அன்புள்ள நண்பன் அர்ஜுனனே, இந்தப் போரைப் பற்றி பொருட்படுத்த வேண்டாம், அமைதியாக அமர்ந்து என்மீது தியானம் செய்” என்று கிருஷ்ணர் ஒருபோதும் அர்ஜுனனிடம் கூறவில்லை. இது பகவத் கீதையின் செய்தி அல்ல.

நாம் எல்லாச் செயல்களிலிருந்தும் விலகியிருக்கக் கூடாது, மாறாக நம்முடைய கிருஷ்ண உணர்விற்குத் தடையாக இருக்கும் செயல்களிலிருந்து மட்டும் விலகியிருக்க வேண்டும். தியானம் என்றால் எல்லா அபத்தமான செயல்களையும் நிறுத்தி விடுதல் என்று பொருள். கிருஷ்ண உணர்வில் முன்னேறியவர்கள் கிருஷ்ணருக்காக இடையறாது செயல்படுகின்றனர்.

ஒரு தாய் தன்னுடைய குறும்புக்காரக் குழந்தையிடம் மட்டுமே “அமைதியாக உட்கார், எதுவும் செய்ய வேண்டாம்” என்று கூறுகிறாள். குழந்தை தனது அன்னைக்கு தொந்தரவைத் தவிர வேறு எதையும் செய்யாதபட்சத்தில், அம்மா கூறுகிறாள், “அன்புள்ள குழந்தையே, இங்கேயே அமர்ந்தபடி அமைதியாக இரு.” ஆயினும், அந்தக் குழந்தையினால் ஏதேனும் நல்ல காரியத்தினைச் செய்ய முடியுமெனில், அம்மா கூறுவாள், “அன்புள்ள குழந்தையே, இதைச் செய்வதற்கு எனக்கு உதவுகிறாயா? அங்குச் சென்று இந்த காரியத்தைச் செய்கிறாயா?” ஒரே இடத்தில் அமைதியாக அமர்தல் என்பது நல்ல காரியங்களைச் செய்ய இயலாதவர்களுக்கு உரித்தானதாகும். ஒரு குழந்தை ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்போது, அவன் எந்த விஷமமும் செய்வதில்லை. அமைதியாக அமருதல் என்றால் அபத்தங்களைப் புறக்கணிப்பதாகும், நல்ல செயல்களைச் செய்வதல்ல.

ஆக்கபூர்வமான செயல்களைச் செய்தல்

செயல்களைப் புறக்கணித்தல் என்பது உயிரோட்டமற்ற நிலையாகும். ஆக்கபூர்வமான செயல்களில் உயிரோட்டம் உள்ளது, ஆக்கபூர்வமான செயலே பகவத் கீதையின் செய்தியாகும். “இதை செய்யாதே,” என்று கூறுவது ஆன்மீக வாழ்க்கை அல்ல, “இதை செய்!” என்று கூறுவதே ஆன்மீக வாழ்க்கையாகும். முறையாக செயல்படும் பொருட்டு, நீங்கள் செய்யக்கூடாத செயல் என்று சில செயல்கள் உள்ளன. எனவே, சில செயல்கள் தடை செய்யப்படுகின்றன. இருப்பினும், மொத்த பகவத் கீதையும் “செய்” என்று கூறுகிறது. எனக்காகப் “போரிடுவாயாக,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். பகவத் கீதையின் தொடக்கத்தில், “நான் போரிட மாட்டேன்,” என்று கிருஷ்ணரிடம் அர்ஜுனன் கூறியபோது, ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்,

குதஸ் த்வா கஷ்மலம் இதம்

 விஷமே ஸமுபஸ்திதம்

அனார்ய-ஜுஷ்டம் அஸ்வர்க்யம்

 அகீர்தி-கரம் அர்ஜுன

“அன்புள்ள அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்கு கொண்டு செல்வதில்லை, அவமானத்தையே கொடுக்கின்றன.” (பகவத் கீதை 2.2) அர்ஜுனன் ஆன்மீக வாழ்வின் முக்கியத்துவத்தை அறியாதவனைப் போல பேசுகிறான்.

வெறுமனே அமர வேண்டாம்

கிருஷ்ண உணர்வு என்றால் அமைதியாக அமர்ந்திருப்பதில்லை. கிருஷ்ணரேகூட வெறுமனே அமர்ந்திருப்பதில்லை. அவருடைய எல்லா லீலைகளும் செயல்களால் நிரம்பியுள்ளன. கிருஷ்ணர் எப்போதும் ஆடுதல், உண்ணுதல், அனுபவித்தல் முதலிய செயல்களில் ஈடுபட்டிருப்பதை ஆன்மீக உலகிற்குச் செல்லும்போது நாம் காண்போம். அவர் தியானம் செய்வதற்காக அமர்வதில்லை. கோபியர்கள் தியானம் செய்ததாக ஏதேனும் சம்பவங்கள் இருக்கின்றனவா?

சைதன்ய மஹாபிரபு தியானத்திற்காக அமர்ந்தாரா? இல்லை, அவர் எப்போதும் ஆடிக் கொண்டும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்துக் கொண்டும் இருந்தார். ஆன்மீக ஆத்மா இயல்பாகவே செயல்பாடுகள் கொண்டதாகும். நம்மால் அமைதியாக அமர்ந்து எதையும் செய்யாமல் எவ்வாறு இருக்க முடியும்? அது சாத்தியமல்ல. எனவே, பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்தில் அஷ்டாங்க யோக முறையினை ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துரைத்த பின்னர், அர்ஜுனன் வெளிப்படையாகவே கூறினான்,

யோ ’யம் யோகஸ் த்வயா ப்ரோக்த:

 ஸாம்யேன மதுஸூதன

ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி

 சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்

“மதுசூதனரே [கிருஷ்ணரே], மனம் நிலையற்றதும் அமைதியற்றதுமானதால், நீங்கள் இப்போது கூறிய யோகமுறையானது நடைமுறைக்கு ஒத்து வராததாகவும் தாங்க முடியாததுமாகத் தோன்றுகிறது.” (பகவத் கீதை 6.33) அர்ஜுனன் மிகவும் முன்னேறியவனாகவும் கிருஷ்ணருடைய நெருங்கிய நண்பனாகவும் இருந்தபோதிலும், அஷ்டாங்க யோகமுறையினை ஏற்றுக்கொள்வதற்கு அவன் உடனடியாக மறுத்தான். “அஷ்டாங்க யோகம் எனக்கு சாத்தியமல்ல,” என்பது அவனது கூற்றின் சாரமாகும்.

காற்றைவிட கடினமானது

அர்ஜுனன் ஒரு போர் வீரனாக, இல்லறத்தில் வாழ்ந்து வந்தான், அவன் தன்னுடைய நாட்டைப் பெற விரும்பினான். அவன் தியானம் செய்வதற்காக எப்போதாவது அமர்ந்தானா? இந்த தியான யோகப் பயிற்சியினை அவன் முற்றிலுமாக மறுக்கின்றான், மனதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுப்படுத்துவதைவிட கடினம் என்று கூறுகிறான். (பகவத் கீதை 6.34) இதுவே உண்மையாகும். மனதை செயற்கையான முறையில் கட்டுப்படுத்த முடியாது என்பதால், மனதை நாம் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்தியாக வேண்டும். அப்போது அது கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வழிமுறை காற்றைக் கட்டுப்படுத்துவதைவிட கடினமானது என்று அர்ஜுனன் கூறுகையில், நம்மால் என்ன செய்துவிட முடியும்?

எப்படிப் பார்த்தாலும், அர்ஜுனன் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணருடன் நேரடியாகப் பேசிக் கொண்டிருந்தான், அத்தகு அர்ஜுனனே மனம் ஒரு மாபெரும் காற்றைப் போன்றது என்று அறிவிக்கின்றான். காற்றை எவ்வாறு நம்மால் கட்டுப்படுத்த முடியும்? கிருஷ்ணருடைய தாமரைத் திருவடிகளில் மனதை நிலைநிறுத்துவதன் மூலமாக மட்டுமே அதைக் கட்டுப்படுத்த முடியும். இதுவே தியானத்தின் பக்குவநிலையாகும்.

எளிதான கிருஷ்ண பக்தி

உண்மையில், ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு யாரும் விரும்புவதில்லை. நாம் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? நாம் ஆக்கபூர்வமான செயல்களுடன் மகிழ்ச்சியில் இன்பமாக வாழ வேண்டியவர்கள். கிருஷ்ண உணர்வில், ஆடலும் பாடலும் மனமகிழ்வைத் தருகின்றன, நாம் களைப்படையும்போது பிரசாதம் ஏற்கின்றோம். ஆடுதல் கடினமானதா? பாடுதல் கடினமானதா? எங்களுடைய கோயிலில் ஆடுவதற்கு நாங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. நீங்கள் நடன அரங்கத்திற்குச் சென்றால், உள்ளே நுழைவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும், நாங்கள் அதுபோன்று கட்டணம் வசூலிப்பதில்லை. இசையை அனுபவித்து ஆடுவதும் சுவையான உணவை உண்ண விரும்புவதும் இயல்பானதாகும். இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, இதுவே எங்களுடைய தியானமுறை.

எனவே, இந்த யோக முறையில் கடின உழைப்பு ஏதுமில்லை. இஃது எப்போதும் மனமகிழ்வைத் தரக்கூடியது. ஸு-ஸுகம், பகவத் கீதையின் ஒன்பதாவது அத்தியாயத்தில் (9.2), இந்த யோக முறை ஸு-ஸுகம் (மிகவும் மகிழ்ச்சியானது) என்று கூறப்பட்டுள்ளது. “இது நீடித்து நிலைப்பதும், இன்பகரமாக நிறைவேற்றப்படுவதுமாகும்.” இஃது இயற்கையானது, இயல்பானது, தன்னிச்சையானது. இதுவே ஆன்மீக உலகில் நம்முடைய உண்மையான வாழ்க்கையாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives