ஸ்ரீல பிரபுபாதரின் நினைவுகள்
சீடர்களின் மீதான பாசம்
பவானந்தர்: சலவைக்கல் தொழிலாளர்கள் சிலர் அங்கேயே கூரை வீட்டை அமைத்து வாழ்ந்தனர், அவை கட்டுமான தளத்திற்கு அருகில் இருந்தன. கட்டிடத்திற்கு வெளியே ஒரு கை பம்ப் இருந்தது, அதில்தான் நாங்கள் குளித்தோம், அதிலிருந்துதான் தொழிலாளர்கள் சிமெண்டிற்கு தண்ணீர் எடுப்பார்கள். சிறிது தூரத்தில் இரண்டு கழிப்பறைகள் இருந்தன—ஒன்று ஆண்களுக்கு, ஒன்று பெண்களுக்கு. கழிப்பறை என்றால், பூமியில் வெறும் இரண்டு துளைகள் போடப்பட்டிருந்தன, அவ்வளவுதான். அதைச் சுற்றி கூரை போடப்பட்டிருந்தது. புயலும் மழையும் வரும்போது கழிப்பறைகளுக்குச் செல்வது மிகவும் கடினமாக இருந்தது, வயல்களில் சேற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும். எல்லா இடங்களிலும் பாம்புகள் இருந்தன. அவை காட்டுப் பாம்புகள்! பொதுவாக கட்டுமான தளத்தில் யாரும் வசிப்பதில்லை, ஆனால் நாங்கள் அங்கேயே வசித்தோம். ஸ்ரீல பிரபுபாதர் எங்களை அங்கே அனுப்பியிருந்தார். பிரபுபாதரின் கட்டளை எங்களை மகிழ்ச்சியாக வைத்தது. கழிவறைகள் இல்லை, அறைகள் இல்லை, எந்த வசதியும் இல்லை–கான்கிரீட் போடப்பட்ட திறந்த தளங்கள் மட்டுமே இருந்தன.
பிரபுபாதரின் மீது நாங்கள் வைத்திருந்த அன்பும் அவர் எங்களின் மீது வைத்திருந்த அன்புமே எங்கள் அனைவரையும் அவ்வாறு செயல்படச் செய்தது.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!
மூலம்: Śrīla Prabhupāda-līlāmṛta, நூல் 5