ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதை






கருத்து
(1) திருட்டில் நேர்மையைப் பற்றி பேச முடியுமா? மற்றவர்களின் சொத்தைத் திருடாமல் இருப்பதுதான் நேர்மை. எந்தப் பொருள் யாருக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்து செயல்படுவதே நேர்மை. அதுபோலவே, அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் பெற்றுள்ள பொருட்கள் யாவும் கடவுளுக்கே சொந்தமானவை. அதை அவருக்கு அர்ப்பணிக்காமல், நாமே பங்கிட்டுக்கொள்ள நினைத்தால், அது திருட்டை நேர்மையாகப் பங்கிடுவதைப் போன்றதாகும்.
(2) திருடர்கள் என்றாலே நேர்மையற்றவர்கள். அப்படியிருக்க அவர்கள் நேர்மையைப் பற்றி பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது? திருடர்களுக்கும் நேர்மைக்கும் சம்பந்தமே இல்லை. அதுபோலவே, விஞ்ஞானிகளுக்கும் பரம்பொருளுக்கும் சம்பந்தமே இல்லை. பரம்பொருளை நிரூபிப்பதற்கான திறன் விஞ்ஞானத்தில் கிடையாது. விஞ்ஞானம் மிகச் சிறியது. விஞ்ஞானத்தினால் பௌதிக உலகத்தையே முறையாகப் புரிந்துகொள்ள முடியாது, பரம்பொருளை எவ்வாறு அறிய முடியும்?
எனவே, விஞ்ஞானத்தினால் பரம்பொருளை உணர முடியாது. பெரிய கடலினை ஒரு டம்ளரில் அடைக்க முடியுமா? முடியாது. அதுபோலவே, மனிதனால் உருவாக்கப்பட்ட கருவிகளையும் கொள்கைகளையும் கொண்ட விஞ்ஞானத்தினால், ஜடத்திற்கு அப்பாற்பட்ட விஷயத்தை எவ்வாறு நிரூபிக்க முடியும்?
gf3hrm