அபத்தங்களுக்கு எதிராகப் போராடுவோம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

அபத்தங்களுக்கு எதிராகப் போராடுவோம்

பக்தர்கள் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பவர்கள் கிடையாது, தேவைப்பட்டால் போரிடுவர் என்பதுகுறித்து, இராணுவ அதிகாரி ஒருவரிடம் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விளக்குகிறார்.

விருந்தினர்: உங்களிடமிருந்து கேட்டவற்றை வைத்து, கடவுளைப் பற்றிய தங்களது கொள்கையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. (மேலும் விரிவாக விளக்க வேண்டுகிறார்)

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் ஒரு தெய்வீக “நபர்” என்பதே எங்களுடைய கொள்கை. ஈஷ்வர: பரம: க்ருஷ்ண ஸச்-சித்-ஆனந்த விக்ரஹ:. ஈஷ்வர என்றால் பகவான். முழுமுதற் கடவுள் ஒரு நபர். நீங்கள் ஒரு நபராக இருப்பதைப் போலவே, அவரும் ஒரு நபர். ஆனால் அவர் பரம புருஷர், உன்னதமான நபர். நித்யோ நித்யானாம். அவர் வழிநடத்துபவர், நாம் வழிநடத்தப்படுபவர்கள். அதாவது அவர் எஜமானர், நாம் அவருடைய சேவகர்கள். “நான் கடவுளுடைய நித்திய சேவகன்” என்பதை உணர்வதே தன்னுணர்வாகும். பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், மமைவாம்ஷோ ஜீவ-லோகே ஜீவ-பூத: ஸநாதன:, “நித்தியமான உயிர்வாழிகள் அனைவரும் எனது அங்கங்களே.” எவ்வாறு அங்கங்களின் கடமை முழுமைக்கு சேவை செய்வதோ, அவ்வாறே உயிர்வாழிகளின் ஒரே கடமை பரமனுக்கு சேவை செய்வதே.

விருந்தினர்: ஐயா, மற்றுமொரு விஷயம், கிருஷ்ணர் ஒருபோதும் அர்ஜுனனை வெறுமனே அமர்ந்து பஜனை செய் என்று கூறவில்லை. அவர், உத்திஷ்ட மாம் அனுஸ்மர யுத்த்ய:  “எழுந்து போரிடுவாயாக” என்றுதானே கூறியுள்ளார்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம், யாருடன் போரிடுவது?

விருந்தினர்: யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் எதிரி யார் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதர்: இது நல்ல கூற்று. எதிரியை அறியாவிடில், எவ்வாறு உங்களால் போரிட முடியும்? வைஷ்ணவர்களாகிய நாங்கள் போர் அவசியமில்லை என்று கூறுவதில்லை. நாங்கள் ஒருபோதும் அவ்வாறு கூற மாட்டோம். போருக்கான அவசியம் ஏற்பட்டால், போரிடத்தான் வேண்டும். நியூயார்க் நகரில் திரு கோல்ட்ஸ்மித் என்பவர் என்னிடம் வினவினார், “கிருஷ்ணர் எதற்காக அர்ஜுனனை போரிடுமாறு அறிவுறுத்தினார்? வன்முறையைத் தூண்டியது ஏன்?” இவ்வாறாக, சிலர் எதிர்க்கின்றனர். இருப்பினும், பரம புருஷ பகவானுடைய செயல்களை எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இதுவே எங்களுடைய பார்வை.

வைஷ்ணவர்களாகிய நாங்கள் மந்திர உச்சாடனத்தில் ஈடுபடுகிறோம். ஆயினும், போருக்கான அவசியம் வரும்போது நாங்கள் பலமற்றவர்களாக இருந்து விடுவதில்லை. நாங்களும் போரிடுவோம். பெரிய மனிதர் ஒருவர் என்னிடம் கூறினார், “வைஷ்ணவம் ஒருவனை சோம்பேறி
ஆக்குகிறது, செயல்பட விடமால் தடுக்கிறது.” அதற்கு நான், “நீங்கள் வைஷ்ணவர்களைப் பார்த்ததில்லை” என்றேன். ஹனுமான், அர்ஜுனன்—இவர்களே இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் நாயகர்களாக உள்ளனர், இவர்கள் போரில் ஈடுபட்டவர்கள்.

விருந்தினர்: ஆமாம், அவர்கள் போரிட்டனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அவர்களைவிட சிறந்த வைஷ்ணவர்கள் யார்?

விருந்தினர்: யாருமில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: எனவே, வைஷ்ணவன் சோம்பேறியாக இருப்பதில்லை, நிச்சயமாக இல்லை.

விருந்தினர்: நன்றாக நிரூபித்துள்ளீர்கள். அவசியம் ஏற்பட்டால் …

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. எங்களுடைய தற்போதைய போராட்டம், நாத்திகத்திற்கு எதிரானது. நாத்திகர்கள் கூறுகின்றனர், “கடவுள் இல்லை. கடவுள் இறந்து விட்டார். நானும் கடவுள். நீயும் கடவுள்.” நாங்கள் இத்தகைய கொள்கைகளை எதிர்த்து போராடிக் கொண்டுள்ளோம். எங்களுடைய போர் மிகவும் வலுவானது. நாங்கள் சும்மா இருப்பதாக நினைத்து விடாதீர்கள். நான் நாத்திகர்களுடன் போரிடுவதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

நாங்கள் கூறுகிறோம், “கிருஷ்ணரே கடவுள். கிருஷ்ணரே பரம புருஷ பகவான். அவர் ஒரு நபர். அவர் இறக்கவில்லை.” இதுவே எங்களுடைய பிரச்சாரம். இதுவே எங்களுடைய போர்.

விருந்தினர்: கடவுள் இறக்கவில்லை. அவர் இறக்கவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர் எவ்வாறு இறக்க முடியும்? கடவுள் இறந்து விட்டதாக உங்களால் எவ்வாறு நினைக்க முடிகிறது? இது முட்டாள்தனம்.

விருந்தினர்: கடவுள் இறந்து விட்டதாக நினைத்தால், அஃது அவர்களுடைய அறியாமையே.

ஸ்ரீல பிரபுபாதர்: இவ்வாறாக, நாங்கள் அந்த அறியாமைக்கு எதிராகப் போரிடுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் பற்பல (போலியான) கொள்கைகள், சமய நெறிமுறைகள் தேவையின்றி முளைத்துள்ளன. அதை கவனிக்கிறீர்களா? பரம புருஷ பகவானிடம் சரணடைவது மட்டுமே தர்மம் (சமயம்) என்ற கொள்கையில் நாங்கள் உறுதியுடன் நிற்கின்றோம். இந்த சரணாகதியே உண்மையான சமயம்.

விருந்தினர்: முழுமையான சரணாகதி.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், முழுமையான சரணாகதி. இதுவே உண்மையான சமயம், உண்மையான தர்மம். கிருஷ்ணர் கூறுகின்றார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, “எல்லா விதமான தர்மங்களையும் துறந்து என்னிடம் மட்டும் சரணடைவாயாக.” இவை கிருஷ்ணருடைய வார்த்தைகள். பஹுனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே. ப்ரபத்யதே—இதுவே சரணாகதி.

விருந்தினர்: (இந்தூர் நிகழ்ச்சியின்) முதல்நாள் துவக்க விழாவில் பேசியவர்கள் கர்ம யோகத்தைப் பற்றி சில விளக்கங்களை வழங்கினர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், ஆளுநர் அவர்கள் கர்ம யோகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். சாதுக்
களின் பூமியாக, கிருஷ்ணரின் பூமியாக, இராமசந்திரரின் பூமியாக, பரீக்ஷித் மஹாராஜரின் பூமியாகத் திகழும் இந்தியாவில், தற்போது எவ்விதக் கட்டுப்பாடுமின்றி பசுவதை நிகழ்ந்து வருகின்றது. ஆனால், வேடிக்கையைப் பாருங்கள், அவர்கள் கர்ம யோகத்தைப் பற்றிப் பேசுகின்றனர்.

விருந்தினர்: இந்தியா எங்கே சென்று கொண்டுள்ளது, கிருஷ்ணருடைய பூமி எங்கே சென்று கொண்டுள்ளது என்பதே தெரியவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: உண்மைதான், நம்மால் முடிந்ததை கண்டிப்பாக மேற்கொள்வோம்.

விருந்தினர்: நிச்சயமாக, இத்தகைய பழக்கவழக்கங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும். இது நமது கடமை.

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக. நீங்கள் இராணுவ வீரர், இத்தகைய அபத்தங்களுக்கு எதிராகப் போரிடுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives