—அக்டோபர் 7, 1972, ஓக்லாந்து, கலிஃபோர்னியா
அக்டோபர் மாதத்தின் குளிர்ந்த காலைப் பொழுதில், பிரபுபாதருடன் இணைந்து நாங்கள் ஓக்லாந்தின் உட்பகுதியில் அமைந்திருந்த மெரிட் பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது நாங்கள் ஒரு சிறிய உயிரியல் பூங்காவின் வாயிலை அடைந்தோம். அங்கே “குழந்தைகளுக்கான விந்தை உலகம்” என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்த ஸ்ரீல பிரபுபாதர், கீழ்வானில் சற்று தொலைவில் அமைந்திருந்த வானளாவிய உயர்ந்த கட்டிடங்களைச் சுட்டிக்காட்டி, “வயதுவந்தோரின் விந்தை உலகம்” என்று கூறினார். பிரபுபாதரின் இளம் சீடர்களான நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். பிரபுபாதர் தொடர்ந்து நடந்தார்.
ஸ்ரீல பிரபுபாதருடனான காலை நடைப்பயிற்சியினை நாங்கள் இதற்காகவே விரும்பினோம். அந்த தெய்வீக நபரின் வார்த்தைகள் எங்களது அறியாமையினை வெட்டி வீழ்த்தின, எவ்வளவோ பெரிய விஷயங்களை எளிமையான முறையில் தெள்ளத்தெளிவாக விளக்கின. “வயதுவந்தோரின் விந்தை உலகம்”—வேறு ஏதும் அவர் கூறவில்லை, கூறத் தேவையும் இல்லை. முப்பது நொடிகளில் அவர் நவீன நாகரிகத்தின் மடமையை தெளிவாகக் கூறிவிட்டார்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!