Home Srila Prabhupada Books in Tamil கீதாசாரம்

கீதாசாரம்

 30.00

 

Description

பகவத் கீதை இந்தியாவின் ஆன்மீகப் பொக்கிஷங்களில் தலை சிறந்ததாகும். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், இயக்கத்தினைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அதாவது 1967இல் பகவத் கீதையினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் தெளிவான விளக்கவுரையினை வழங்கினார். ஆனால் அச்சமயத்தில் அவரால் அதனை அச்சிட இயலாத காரணத்தினால், அவர் தனது பகவத் கீதை உரைக்காக எழுதிய அறிமுகத்தினை தனியாக ஒரு சிறு புத்தகத்தின் வடிவில் வெளியிட்டார். அந்த அறிமுகத்தின் தமிழ் பதிப்பே இந்த கீதாசாரம். இதனைப் படிப்பவர்கள் பகவத் கீதையின் தத்துவக் கருத்துகளை மிகவும் தெளிவாகவும் ஒளிவுமறைவின்றியும் அறிந்துகொள்வர். பகவத் கீதையினை முதன் முறையாக அணுகுவோருக்கு இந்த அறிமுகம் (கீதாசாரம்) மிகவும் உதவியாக அமையும். கீதையின் உண்மையான கருத்துகளை ஒதுக்கிவிட்டு எழுதப்பட்டுள்ள உரைகளும் கீதாசாரங்களும் ஏராளமானவை இருக்க, ஸ்ரீல பரபுபாதரின் பகவத் கீதை உரையானது, உள்ளது உள்ளபடி பந்தவொரு சொந்த கற்பனைகளும் வியாக்கியானங்களும் இன்றி கொடுக்கப்பட்டுள்ளது. கீதையில் கிருஷ்ணர் உண்மையில் என்ன உறுகின்றாரோ, அதில் ஸ்ரீல பிரபுபாதர் நமது கவனத்தினை – நறுத்துகிறார். எனவே, இந்த கீதாசாரம தங்கள் அறிவொளியை வழங்கி தனிப்பட்ட வாழ்வில் ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்