AUTHOR NAME

Jaya Krishna Dasa

13 POSTS
0 COMMENTS
திரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

ஸ்ரீ இராமானுஜரின் வழியில்

இராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்றொரு பெயரும் உண்டு. திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்குலப் பெண்ணாகப் பாவித்து கோபியர்களின் மனோபாவத்தினைப் புகழ்ந்திருப்பாள். ஸ்ரீ இராமானுஜர் தன்னுடைய சீடர்களை அந்த பாவத்தினைப் பின்பற்றச் சொல்லவில்லை என்றாலும், அவர் அந்த அர்த்தங்களால் பெரிதும் மயங்கி, தினமும் யாசிக்கச் செல்லும்போதெல்லாம் திருப்பாவையைப் பாடுவார். கிருஷ்ணரை வழிபடுவதற்கு மிகவுயர்ந்த வழிமுறை கோபியர்களின் மனோபாவமே என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு உரைத்துள்ளார். பக்தர்கள்

நாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை?

வைகுண்ட பிராப்தி அடைந்தார் என்று ஈமக்கிரியை பத்திரிகையில் அச்சடித்துக்கொள்ளும் நாம் வைகுண்டம் என்றால் என்ன என்றோ, அங்குள்ள சூழ்நிலை என்ன என்றோ, அங்குள்ள மக்களின் உடலமைப்பு, செயல்பாடுகள், இறைவனின் செயல்பாடுகள் என எதுவுமே தெரியாது இருப்பர். இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஒருவன் அங்குள்ள சூழ்நிலையினை உணராது சென்றால், அவன் குளிரிலும், நமது உணவின்றியும் துன்பப்படுவது உறுதி. எங்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவின்றி இருப்பவர்கள் பலர். தெளிவான சித்தாந்தங்களைப் படிக்காமல், குழப்பத்திலேயே இருந்தால் யாருக்கு என்ன பயன்? நமக்கே என்ன பயன்? இவ்வளவு சொல்லிய பிறகும் பகவான் கிருஷ்ணரே புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்னும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது இருப்போமானால் நமது இலக்குதான் என்ன? வருடத்திற்கு ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று மட்டும் 1008 முறை காயத்ரி மந்திரம் கூறுபவர்கள்

உண்மையான உணர்வுகள் பொய்யான உணர்வுகள்

இன்றைய சமுதாயமானது பணத்தினை ஈட்டுவது, கட்டுபாடின்றி இன்பம் நுகர்வது போன்ற உணர்வுகளில் வெகு ஆழமாக சென்றுள்ளது. இத்தகைய உணர்வுகளின் விளைவுகள் என்ன என்பதையும் வேதங்கள் நமக்கு உபதேசிக்கும் உணர்வு என்ன என்பதையும் வேதங்கள் உணர்த்தும் உணர்வினை அடைவதால் என்ன பயன் என்பதையும் சற்று விளக்கமாக உணர்வோம்.

சாத்தான் இறைவனின் போட்டியாளனா?

சில மத நம்பிக்கைகளில், இறைவனுக்கு எதிரான காரியங்கள் சாத்தானால் செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இறைவனை எதிர்த்து அந்த பதவிக்காக சாத்தான் புரட்சி செய்தான் என்றும், எண்ணிலடங்கா ஜீவராசிகளில் சிலர் சாத்தானின் திட்டத்திற்கு துணை போனார்கள் என்றும், சிலர் நடுநிலையில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாது இருந்தனர் என்றும், பலர் சாத்தானை எதிர்த்து இறைவனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது.

புத்தாண்டு கொண்டாட்டமும் அறியாமையும்

ஒவ்வொரு புத்தாண்டும் (ஆங்கில புத்தாண்டாகட்டும், பிராந்திய புத்தாண்டாகட்டும்) மக்கள் மன மகிழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. நவீன காலத்தில் ஆங்கில புத்தாண்டின்போது. டிசம்பர் 31ஆம் நாள் இரவு, கடிகாரம் பன்னிரண்டு மணியைத் தொடுகின்ற தருணத்தில், "கொண்டாட்டங்கள்" என்ற பெயரில் பலவிதமான அமர்க்களங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

Latest