AUTHOR NAME

Jaya Krishna Dasa

13 POSTS
0 COMMENTS
திரு. ஜெய கிருஷ்ண தாஸ், தற்போது அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுநராக பணியாற்றிய வண்ணம், கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறார்.

ஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானம்

பொதுவாக, கோயில்களுக்குச் சென்று வழிபடுவோர், அல்லது கானகம் சென்று தவம் புரிவோரை மெய்ஞானிகள் என்று நினைத்துக் கொள்கிறோம். மேலும், திரைப்படங்களில் காட்டப்படுவதை பக்தி என்று எண்ணி ஏமாறுகின்றனர் மக்கள். தங்களது சொந்த இன்பங்களுக்காக விரதங்கள் இருப்பதை பக்தி என்று எண்ணுகின்றனர். வாரத்தில் ஒரு குறிப்பிட்ட கிழமையில் தங்களது வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது என்பது அநேகமாக அனைத்து மதங்களிலும் உள்ளது. முஸ்லீம் வெள்ளிக் கிழமை தொழுகைக்குச் செல்வதும், கிருஸ்துவன் ஞாயிற்றுக் கிழமையை ஆண்டவருக்கு செலவிடுவதும், இந்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் அருகிலுள்ள கோயிலுக்குச் செல்வதும் வழக்கம்; ஆனால் அதுவே தனது மார்கத்தின் நோக்கம் என்று எண்ணினால், அது சரியல்ல.

செய்யும் தொழிலே தெய்வமா?

இன்பத்தை வேண்டி பல்வேறு தொழில்களைச் செய்கின்ற நாம், தொழில்களை தெய்வங்களாக எண்ணி காலத்தினை வீணாக்குகின்ற நாம், உண்மையாக செய்ய வேண்டிய தொழில் பக்தித் தொண்டு மட்டுமே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பிறவிதோறும் அரைத்தவற்றையே மீண்டும் அரைத்திடாது இனியுள்ள காலங்களையாவது நன்முறையில் பக்தித் தொண்டில் ஈடுபடுத்தி உண்மையான ஆனந்தத்தினை அடைவோமாக.

போலி சாமியார்களும் உண்மை சாதுக்களும்

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்   அன்புள்ள இறைவனை உண்மையாகத் தேடும் ஆன்மீக அன்பர்களுக்கு, இன்றைய காலக் கட்டத்தில் மட்டுமின்றி நம் முன்னோர்கள் காலம் தொட்டும், இனி வரும் காலங்களிலும் நாம் அனைவரும் சந்திக்கின்ற முக்கியமான...

Latest