AUTHOR NAME

Sridhara Srinivasa Dasa

14 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.

சங்கம் : பூவோடு மணக்கும் நாரா, நாரோடு வாடும் பூவா?

ஒரு மனிதனை அவனுடைய சேர்க்கையை வைத்து அறியலாம் என்பது உலகெங்கிலும் அறியப்படும் பழமொழியாகும். "இனம் இனத்தோடு சேரும்," "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என பல விதங்களில் சகவாசத்தின் தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. நாம் மேற்கொள்ளும் சகவாசம் நம்முடைய ஆன்மீக வாழ்வில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. அந்த சங்கம் குறித்த சிறு அலசல் இதோ, இங்கே.

மங்களகிரி

மங்களகிரி என்னும் சிறுநகரம் இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். இந்நகரத்தின் பெயர் காரணம், அங்கு வீற்றிருக்கும் பகவான் நரசிம்மதேவரே. இம்மலையைச் சுற்றி மூன்று நரசிம்ம பகவான் திருக்கோயில்கள் அமைந்துள்ளன: பகவான் லக்ஷ்மி நரசிம்மரின் திருக்கோயில் மலை அடிவாரத்திலும், பானக நரசிம்மரின் திருக்கோயில் மலையின் பாதி உயரத்திலும், கண்டல நரசிம்மரின் திருக்கோயில் மலை உச்சியிலும் அமைந்துள்ளன. இம்மலை இந்தியாவின் எட்டு மஹா-க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாலும், லக்ஷ்மிதேவி இங்கு தவம் புரிந்த காரணத்தினாலும் தோட்டா-கிரி என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மலையின் மங்களத்திற்கு இதர சில விஷயங்களையும் காரணங்களாக பாரம்பரியம் கூறுகின்றது.

தலையெழுத்து காரணமும் தீர்வும்

ஒவ்வொரு மனிதனாலும் (குறிப்பாக, இக்கட்டான சூழ்நிலையில்) எழுப்பப்படும் முக்கியமான கேள்வி: என் தலையெழுத்து என்ன? சந்தோஷம் வரும் சமயத்தில் ஒருவர் கூட, இத்தகைய நற்பலனை பெற தான் என்ன புண்ணியம் செய்தேன் என்று கேள்வி எழுப்புவதில்லை.

கிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்

கடவுளை இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று மதத்தின் அடிப்படையில் அணுகாமல், தத்துவத்தின் அடிப்படையில் அணுகுதல் சாலச் சிறந்ததாகும். கிருஷ்ணர் ஒரு இந்துவோ முஸ்லீமோ கிருஸ்தவரோ கிடையாது–அவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அனைத்திற்கும் உரிமையாளர், பரம அனுபவிப்பாளர், அனைவருக்கும் உற்ற நண்பன். இக்கருத்துகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டு, மக்கள் இதனைப் புரிந்துகொள்ளும்போது, உலகம் முழுவதிலும் அமைதியும் வளமும் நிச்சயம் ஏற்படும்.

Latest